பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்ப உஎ அக

ஆய்வுரை :

இஃது இருவகை வழக்கினும் சொல்லுக்குப் பொருள் கொள் ளுந்திறன் இதுவெனவுணர்த்துகின்றது.

(இ - ள்.) இரு திணையைம்பால்களினும் ஒரு திணையில் ஒருமைப்பாலில் வைத்து உணர்த்தப்பட்ட பொருள் அத்தினை யின் ஏனைப்பாலாகிய பன்மைப்பா லினும் பொருந்தி வருவன வாக அமைதலே வழக்கு நெறியென்று கூறுவர் புலவர். எ-று.

கிழவன், கிழத்தி என்பன முதலாக இவ்வாறு ஆணொருமை யும், பெண்ணொரு மையும் உணர்த்தி நிற்கும் ஒரு மைச் சொற்கள், நானிலத்துத் தலைவரையும் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச்

துண்டாகவே இத்தொல்காப்பியத்திற் கூறப்படும் தலைமக்களது அன் பின் ஐந்திணை யொழுகலாறு இல்லாத தலைவர் கட்குரிய பொய்மையான புனைந்துரையாய், இதனைக் கூறும் தொல்காப்பியமும் உலகவழக்குக்கு ஒவ்வாத நூலெனக் கருதப் படும் கிலையேற்படும். இங்ங்னங்கொள்ளுதல் 'வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத் துஞ்சொல்லும் பொருளும் காடிப் புலங்தொகுத்தோன் தொல் காப்பியன் எனப் பனம்பாரனார் கூறிய நூலாசிரியர் வரலாற்றுக்கு முற். றிலும் முரணாகும். எனவே உலகத்து ஓரூர் கண்ணும் ஒரோவொருகுலத்தின் கண்ணும் தலைமைப் பண்புடைய தலைவரும் தலைவியரும் பலராயினும் அவர் களையெல்லாம் உலகவழக்கிற் பொதுப்படக் கூறும்போது கிழவன் கிழத்தி யென் றாற்போன்று ஒருமைச் சொல்லால் வழங்கினும் அப்பெயர்கள் முறையே தலைவர் பலரையும் தலைவியர் பலரையும் குறித்த பன்மைப்பொருளினவாகவே கொள் ளுதல் வேண்டும் என அமைதி கூறும் நிலையில் இச்சூத்திரம் இயற்றப்பெற்ற தென்பது கச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும்.

'காட்டிக்கொள்ளப்பட்டார்' என்பது இறையனார் களவியலுரையாசிரியர் கருத்தாகும். அன்பின் ஐந்திணைக்களவு என்னும் ஒழுகலாறு இல்லது இனியது கல்லது என்று புலவரால் காட்டப்பட்டதோர் ஒழுக்கம்' என்பர் இறையனார்

களவியலுரையாசிரியர். எனவே அன்பின் ஐக்தினையொழுகலாற்றிற்குரியராக வைத்துரைக்கப்படும் தலைவன் தலைவி என் போர் இவ்வுலகத்துள்ளாரன்றி வேறா கப் புலவர்களால் காட்டிக் கொள்ளப்பட்டார் என்பது இறையனார் களவியலுரை

யாசிரியர் கருத்தெனத் தெரிகிறது.

இக்கருத்துத் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன் றென்பது மக்கள் நுதலிய அகனைக்திணையும்’ என வரும் அவரதுவாய்மொழியால் கன் குபுலனாம். "இஃது இல்லதெனப்படாது, உலகியலேயாம். உலகியலின்றேல், ஆகாயப்பூ நா றிற்று எனற வழி அது சூடக்கருதுவாருமின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழித் திடப் படுதலின் இதுவும் இழித்திடப்படும்" என கச்சினார்க்கினியர் அகத்திணை யியலுரை முகத்து இறையனார்களவியலுரையாசிரியர் கருத்தினை மறுத்துள்ளமை யும் இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும்.