பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா உக $Iቆቛ

உ-ம் 'இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்

கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடுநவை ஆராற் றறுகனை முற்றி உடங்குநீர் வேட்ட உடம்புயங் கியானை கடுந் தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு வெறிநிரை வேரு கச் சாரச் சாரலோடி நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ் சிறுநணி நீதுஞ்சி யேற்பினும் அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோப் உரனுடை புள்ளத்தை (கலி. 12)

எனச் சுரமெனக் கூறினாள்.

தலைவியுந் தோழியாற் கூற்றுநிகழ்த்தும். சூத்திரம் பொதுப் படக் கிடத்தலின் தலைவி உடன்போகக் கருதியவழித் தலைவனுஞ் சுரமெனக் கூறுதல் கொள்க."

எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறின் அவ்வடி கறுக்குந வல்லவோ’’ (கலி. 13)

என வரும். (a.a.)

ஆய்வுரை : இது, களவொழுக்கத்தில் தலைமகனுக்குரியதோர் திறம் கூறுகின்றது.

(இ-ள்) தலைவன் தான்பிரிந்து செல்லுங்கால் தன்னொடு உடன் வரக் கருதிய தலைமகட்கு, 'யான்செல்லக்கருதிய நெறி வெம்மைமிகக பாலை நிலமாம் எனக் கூறிவிலக்குதலும் குற்ற மாகாது. எ-று.

1. சுரம் என மொழிதலாவது, பிரிந்து செல்லுதற்குரிய வழி கடத்தற்கு இயலாத வெம்மையுடையது எனக் கூறும் முகமாக அவ்வழியிற்போதலை விலக்கு தல். இங்கனம் மொழிவோர் இவர் எனக் கூறாது சுரம் என மொழிதல் என இக் நூற்பா பொதுப்பட அமைந்திருத்தலால், "தலைவன் பிரியக் கருதிய வழி கீ போகின் றவிடம் எல்லாவற்றானும் போதற்கரிய நிலம்’ எனத் தலைவியும் தோழியும் கறிவிலக்குதலும் தலைவி தன் னுடன் போகக் கருதியவழித்தான் போகின்ற கெறி வெம்மையுடைய சுரமாம் எனத் தலைவன் கூறுதலும் என இருதிறமும்

கொள்ளப்படும் என்பதாம்.