பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா உம் ::*

உகச. பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே

காப்புக் கைம்மிகுத லுண்மை யான.

நச்சினார்க்கினியம் :

இது களவின்கண் தோழிக் குரியதோர் வழுவமைக்கின்றது.

(இ. ஸ். பொருள் என மொழிதலும் வரை நிலை இன்றே. எமர் வரைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டியெனத் தோழி கூறலும் நீக்குநிலைமையின்று ; காப்புக் கைம்மிகுதல் உண்மையான - காவன் மிகுதியால் தலைவிக்கு வருத்தம் கைகடத் தலுண்டாகையால் (எ . று.)

உம்மையாற் பொருளேயன்றி ஊருங் காடும் மலையும் முதலியன வேண்டுவரென்றலுங் கொள்க.

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது வான் றோய் வன்ன குடிமையும் நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கின் நன்றே யஃதான்று' அடைபொருள் கருதுவிர் ஆயிற் குடையொடு கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன்

S SAAAS A SAS SSAS

1. பொருளென மொழிதலும்’ என்றதொடர் மொழிதற்குரியோர் இன்க: ரென்பதின் றிப் பொதுப்பட அமைந்திருத்தலால் இந்துாற்பாவைத் தலைவனுக்குரிய விதியாகக் கொண்டு பொருள்வயிற்பிரிதல் வேண்டும் எனக் கூறலும் என இளம் | ர னரும், தோழி கூற்றுக்குரியதோர் வழுவமைதியாகக் கொண்டு எமர் வரைவு கேரசமைக்குக் காரணம் பொருள் வேண்டி எனத்தோழி கூறலும் என கச்சினார்க் கினியரும் உரை வரைந்துள்ளனர். இதன் முன் உள்ள உண்டற்குரியவல்லாப் பொருளை யுண்டன போலக் கூறலும் மரபே என்னும் நூற்பாவிற் குறித்தசொத் பொருள்மரபு தோழி கூற்றொடு தொடர்புடையதாக அமைந்திருத்தலானும் இதன் பின் 'அன்பேயறனே இன்பம் காணொடு துறந்தவொழுக்கம் பழித்தன்றாகலின் என வரும் நூ . கானுடைய பெண்பாலார் கூற்றிலமைதற்குரிய பொருள் பற்றியதா தலானும் எமர் வரைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டியே: எனத் தோழிக- தும் கூற்றுக்கள் சங்கத் தொகை நூல்களிற் காணப்படுதலானும் ns یخی غ னார்க்கினியர் கூறுமாறு இதனைத் தோழிக்குரிய கூற்றாகக் கொள்ளுதலே பொருத் தமுடையதாகும்.

2. அடைபொருள் - தலைவி தலைவனை மணந்து கொள்ளுதற்குக் காரண மாகிய பரிசப்பொருள்.