பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் தொல் காப்பியம் பொருளதிகாரம்

சொற்கண்ணே நின்று பன்மைப்பொருளையுணர்த்தும் முறை உலக வழக்கில் நிலைபெற்று வழங்கும் சொற்பொருள் மரபாகும் என்ப தாம்.

உகக. எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்.

இளம்பூரணம் :

என்-எனின், மேலதற்கோர் புறனடை உணர்த்திற்று."

(இ-ள்.) எல்லாவுயிர்க்கும் இன்பமென்பது தான் மனம் பொருந்திவரும் விருப்பத்தையுடைத்து என்றவாறு. எனவே மனம் பொருந்தியவழிப் பரத்தையர் மாட்டும் இன்பமுளதாகும் எனவும், பொருந்தாதவழி மனைவியர் மாட்டும் இன்பமின்றாம் எனவும் கொள்க."

நச்சினார்க்கினியம் :

இது, மேலதற்கோர் புறனடை.

(இ-ள்.) இன்பம் என்பது தான் அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதான்; எல்லா உயிர்க்கும்

1. இஃது ஒருபக்கத்துக் கூறிய பொருண்மை ஒழிந்த பக்கத்தும் வரும் என ஒன்றிவரும் அளவில் கில்லாது, மனம் பொருந்தாத நிலையில் இன்பமும் துன்ப மாதலும் மனம் பொருந்திய நிலையில் துன்பமும் இன்பமாதலும் ஆகிய வேறு பாட்டினை ச் சுட்டி கின்றது எனக்கொண்டு மேல தற்கோர் புறனடை உணர்த்திற்று' எனக் கருத்துரை வரைந்தார் இளம்பூரணர்.

2. இன்பம் என்பது எல்லாவுயிர்கட்கும் உள்ளத்தொடு பொருந்திவரும் உணர்வாயினும் தான் விரும்பிய பொருள்களின் நுகர்ச்சியே இன்பமாகக் கொள் ளப்படுதலின், தான் அமர்ந்து வரூஉ மேவற்று என்றார். அமர்தல்-பொருந்துதல் அஃதாவது நுகர்ச்சிப்பொருளில் உள்ளம் ஒன்றுதல். மேவற்று-விருப்பத்தையுடை யது. மேவல்-விருப்பம்.

ஒருவர் க்கு இணிதல்லாதது மற்றையோர் க்கு இனிதாதலும் ஒருவர்க்கு இனிதாய பொருள் ஏனையோர்க்கு இன்னாதாதலும் உலகியலிற் கண்டது. இன்பம் துன்பம் என்பன உள்ளத்தின் கோட்பாடுகளேயன்றிப் பிறிதில்லை என்பார்,

'இன்னாமை இன்ப மெனக் கொளின் ஆகுங்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு (திருக்குறள். 630) என்றா ர்திருவள்ளுவர்.