பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல் தொல்காப்பியம் - பொருளதிகாரம்

மிக்க பொருளாவது மக்களது நல்வாழ்க்கைக்கு உரிய வாகச் சான்றோர்களால் உயர்த்தக் கூரப்பட்ட அற முதலாகிய, முதற்பொருள்கள், பொருள் வகை என்றது அறமும் புறமு. மாகிய கூறுபாட்டினை, நாண் - நானமாகிய மக்கட்பண்பு, நாண் என்பது உகரச்சாரியை பெற்று நாணு என நின்றது. தலைப் பிரிதல்-நீங்குதல். மிக்க பொருளினுள் நானுத் தலைப்பிரியா நல்வழிப்படுத்துப் பொருள் வகை புணர்க்க என இயையும.

இனி, உலக வழக்கினைக் கடத்து வருவனவாகிய பொருட் பகுதிகளைச் செய்யுளில் அமைத்துக் கூறுங்கால் தலைவி முதலி யோர்க்கு உயிரினுஞ் சிறந்த நாணம் நீங்காமைக் குக் காரண மாகிய நன்னெரியில் அமைத்துக கூறுதல் வேண்டும்’ எனச் சூத்திரத்திற்குப் பொருள் கூறுதலும் பொருத்தமுடையதேயகுாம்.

உகசு. முறைப்பெயர் மருங்கினற் கெழுதகைப் பொதுச் - சொல்

நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே.

இளம்பூரணப் :

என்-எனின். இது வும் வழுவமைத்தலை நுதலிற்று.

(இ-ள்.) முறைப்பெயராவது-இயற்பெயர் முதலிய பெயரச னன்றி முறைமை பற்றி வருவது அது தந்தைமகனைக் கூறும் பொழுது தம்முன், தம்பி, என்பனவும் கிழவன் தோழன் என்பனவும் போல வருவன. :

அப்பெய ரகத்துவரும் நன்றாகிய கெழுதகைப் பொதுச் சொல் லாவது-பயிற்சியாற் கூறும் எல்லா' என்பது.

நிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே என்பது- நிற்ற ற் குரிய மரபினானே யிருபாற்கு முரித்தென்றவாறு. நிற்றற்குரிய மரபின் என்பது இவ்வாறு தோற்றாமையான் என்றவாது.”

1. எல்லா என்னும் இச்சொல் தான் கித்றற்குரிய முறைமைக்கண் இன் ன பால் என்று தோற்றசமையால் ஆண் பெண் என்னும் இருபாற்கும் பொது வாய் வழங்கப்பெதும் என்பதும் இச்சொல் பாலுணர்த்தும் விகுதியினைப் பெறாது அன்பின் கேண்மையாகிய கட்புமுறைமை பற்றியே வருதலின் சொல்லதிகாரத்திற் கூறப்படாது இங்குப் பொருளதிகாரத்திற் கூறப்பட்டது என்பதும் இத்தொடராத்

புலனாம்.