பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


" சிறையிருந்த செல்வியை மீட்பான் வேண்டி இராமன் பொருட்டுக் கடலுக்கு அணையிடப் புகுந்த குரங்கினங்கள் மலைகளைச் சுமந்து வீணான தொல்லைகளை மேற்கொண்டனவே: இப்பாலை நிலத்தின் மணல் ஒன்றினைக் கடலில் இட்டாலே போதுமே, கடல் முழுதும் வறண்டிருக்க ? அறிவற்ற குரங்குகள்!” என்பது சயங்கொண்டாரின் பாலை நில விளக்கம்.

கலிங்க நாட்டின் மீது தண்டெடுத்துச் செல்லுங்கால் கருணாகரத் தொண்டைமான் நடத்திச் சென்ற படையின் அளவைக் கூறுங்கால் உயர்வு தவிற்சியணிகளைக் காணலாம்.

பார்சி றுத்தலின் படைபெ ருத்ததோ
படைபெ ருத்தலின் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க்(கு) அறிது நிற்பிடம்
நெடுவி சும்பலால் இடமும் இல்லையே[1]

[பார்-உலகம், விசும்பு-ஆகாயம்]

என்பது கவிஞரின் வாக்கு. சேனையின் மிகுதியைக் கண்ணுற்ற மக்களில் ஒரு சிலர், " பூமி சிறியதாக இருப்பதால் படை பெரிதாகக் காணப்படுகிறதோ?" என்றும் வேறு சிலர் படைகள் மிகுதியாகவுள்ளதால் பூமிதான் சிறிதாகத் தெரிகின்றதோ?" என்றும் பேசிக் கொண்டார்களாம் என்பது கவிஞர் பெற வைத்த குறிப்பு. எண்ணற்ற தேர்கள் கலிங்க நாட்டில் மிக்க விரைவாகச் செல்லுகின்றன. அவற்றில் கட்டியுள்ள கொடிச் சீரைகள் உலகிடையே இருளை உண்டாக்குகின்றன. திசை யானைகளின் மதநீரை உண்டு களித்திருக்-


  1. தாழிசை.348