பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40



இயற்றிய நூல்கள் பல; அவை: கந்தர் நிரோட்டக அந்தாதி, சிவ சன்னிதான முறையீடு, சித்தி விநாயகர் பதிகம், சுப்பிரமணியர் நிரோட்டக யமகவெண்பா, புதுவைக் கலம்பகம், புதுவை வெண்பா, யமக மயிலத் தந்தாதி, மயிலக் கலம்பகம், மயிலைச் சிலேடை வெண்பா, இராமாயணத் சங்கிரகம், அப்பூதி நாயனார் சரித்திரப்பா, புரூரவச் சக்கரவர்த்தி வாசகப்பா,சூரபத்மன் சரித்திரப்பா, ஞானப்பிரகாசர் புகழ்ப் பாமாலை, இயற்றமிழ்ப் பாமாலை, நலங்குப்பாடல்கள், திருமணப்பாடல்கள் முதலியனவாகும். உதடு குவித்து ஒலிக்கும் உ, ஊ,ஒ,ஓ முதலிய எழுத்துக்கள் வராமல் பாடுவது நிரோட்டகமாகும். நிரோட்டகம், யமகம், சிலேடை முதலியன எழுதுதல் மிகவும் அருமையாகும். இவையே யன்றித் தனிப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

முத்தமிழ்ப் பாவலர்:

பிள்ளையவர்கள் இயற்றமிழேயன்றி, இசைத்தமிழ்நாடகத் தமிழிலும் வல்லுநராய்க் காணப்படுகிறார். இராமாயணச் சங்கிரகப் பாடலை ஆரபிஇராகம்-ஆதிதாளம் அமைத்துப் பாட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்பூதி நாயனார் சரித்திரப்பா, சூரபத்மன் சரித்திரப்பா, புரூரவச் சக்கரவர்த்தி வாசகப்பா ஆகியவை இசையுடன் பாடி நடித்தற்குரிய இசை நாடகங்களாகும். புதுவையில் இவை அன்று நடிக்கப்பட்டன. சூரபத்மன் சரித்திரப்பா, சாரம் முருகன் கோயிலில் கந்தர் சட்டி விழாவின்போது இன்றும் நடிக்கப்படுகிறது. அச்சாகியுள்ள புரூரவச் சக்கரவர்த்தி வாசகப்பாவின் முன்னுரையில், அந்நாடக நூல் நடிப்புடன் அரங்கேற்றப்பட்டதாக ஆசிரியரே தெரிவித்துள்ளார். அப்பூதி நாயனார் சரித்திரப்பா, உரையாடலும் பல்வேறு வண்ணப் பாக்களும் கொண்டது. புரூரவச் சக்கர-