பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி




முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ[1]

[முருகு-மணம்; கழுநீர்-கழுநீர்ப்பூ குழல்-கூந்தல்]

செக்கச் சிவந்த கழுநீரும் -
செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழன்மடவீர்
உம்பொற் கபாடம் திறமினோ[2]

[செகம்-உலகம்: ஒக்க-ஒன்றுசேர; பொன்-அழகு]

என்று காட்டுகிறார். இம்மாதிரி சிருங்காரச் சுவையூட்டும் " சுளைகளைக் " கடைத்திறப்பில் கண்டு மகிழ்க.

நகைச் சுவை

இயற்கைக்கு மாருக எதையாகிலும் நாம் உணர நேர்ந்தால் அது நமக்கு நகைப்பை விளைவிக்கும். ஆனல் அத்தகைய அம்சங்கள் யாவும் நகைச்சுவையைத் தூண்டிவிடும் என்று கூறுதல் ஒண்ணாது. ஆங்கிலத்தில் 'Humour ' என்று வழங்கப்படுவதும் நாம் நசைச்சுவை என்று குறிப்பதும் ஒத்ததல்ல என்பதை நாம் உணரவேண்டும். Humour-ல் நாம் கூறும் நகைச்சுவையும் உள்ளடங்கலாம். கலிங்கத்துப் பரணியில் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் பகுதியில் நகைச்சுவை விளைக்கும் நிகழ்ச்சிகள் வருகின்றன. ஒரு குருட்டுப் பேயின் உண்கலத்தை ஒரு திருட்டுப்பேய் ஒளித்து


  1. தாழிசை - 50
  2. தாழிசை - 74