பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

மர இனப் பகுதி (Botany)

17. இயற்கை மணி காட்டிகள்

ஞாயிறு திரும்பி;

ஞாயிறு (சூரியன்) செல்லும் பக்கம் வணங்கித் (சாய்ந்து) திரும்பும் சூரியகாந்திச் செடிக்கு உரியனவாக, “ஞாயிறு திரும்பி; பொழுது வணங்கி ‘பொழுது திரும்பி’ என்னும் பெயர்கள் பின்வரும் நூல்களில் ஏற்றபெற்றிச் சூட்டப்பட்டுள்ளன. அந்நூல்கள் வருமாறு:- -

மருத்துவ மலையகராதி, பச்சிலை மூலிகைச் சித்த மருத்துவ அகராதி, பதார்த்த குண அரும்பொருள் மருத்துவ அகராதி, ஃபாபிரியசு (Febricius) தமிழ்-ஆங்கில அகர முதலி, ஜூபிலி தமிழ்ப் பேரகராதி, வின்சுலோ (Winslow) தமிழ்-ஆங்கில அகர முதலி, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக் கழக-ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சிய அகராதி, சாம்ப சிவம் பிள்ளையின் மருத்துவம்-மரஇயல்-அறிவியல் பற்றிய தமிழ்-ஆங்கில அகர முதலி, முய்சே (L. Mousset)-துய்புய் (L. Dupus) என்னும் பிரெஞ்சுத் துறவியர் இருவர் தொகுத்த இலத்தீன் பிரெஞ்சு தமிழ் அகர முதலிபிரெஞ்சு தமிழ் அகர முதலி-தமிழ் பிரெஞ்சு அகர முதலி ஆகிய அகர முதலிகள், லரூசு என்பவரின் Dictionnaire Larousse என்னும் பிரெஞ்சுக்குப் பிரெஞ்சுப் பேரகராதி, Lucien M.Giboin arsr, Jouff stapu Eptiome De Botanique Et De Matiere Medicale De L'Inde என்னும் பிரெஞ்சு நூல், அமெரிக்க-ஆங்கிலக் கலைக் களஞ்சியம் முதலியன.