பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

கொண்டு என் மனைவி மக்கள் அப்பால் நகர்ந்தனர், நான் கூறியது உண்மையன்று-விளையாட்டே இது நடந்த பல ஆண்டுகட்குப் பின் நேர்ந்த நிகழ்ச்சி ஒன்று வருமாறு:

1982 ஆம் ஆண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தயான், சாம்பசிவம் பிள்ளையின் மருத்துவம்- வேதியியல் -மரவியல.- பல துறை அறிவியல் தொடர்பான தமிழ்-ஆங்கில அகர முதலியைப் பார்த்து மரவினப் பெயர்களைக் குறித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெருவியப்பு காத்திருந்தது. அந்நூலில், 'நட்சத்திரம் தோன்றி=பொன்னாங் கண்ணி' என்று ஒரு சொற்பொருள் விளக்கம் தரப்பட்டிருந்தது. அதாவது: ‘நட்சத்திரம் தோன்றி' என்பதற்குப் 'பொன்னாங் கண்ணி' என்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அதாவது, பொன்னாங்கண்ணிக்கு 'நட்சத்திரம் தோன்றி' என்ற ஒரு பெயர் உண்டு என அறிவிக்கப்பட்டது.

இதைக் கண்டதும், யான் அடைந்த வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. பல ஆண்டுகட்குமுன் எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து மேலும் சுவை யூட்டிற்று.

இதனால் நாம் அறிவது, பொன்னாங் கண்ணிக்கீரை, தன்னை உண்பவர்க்குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும் என்பது, பகலிலேயே விண்மீன்கள் தோன்றித் தெரியும் என்பது. 'உயர்வு நவிற்சி’யாக இருக்கலாம்? அல்லவா ஒரு வேளை சித்தர் யாருக்காவது உண்மையாகவே தெரிந்திருக்குமோ!

இங்கே, இரண்டாம் உலகப்பெரும்போரின்போது ஏற்பட்ட நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வருகிறது: செர்மானியர்