பக்கம்:பதினாறும் பெறுக.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5

முத்தன்: சந்திர மண்டலத்துக்கு ஏன் போறீங்க? மனித சக்தி இயற்கையை கெலிக்கிற சங்கதிதானே இங்கேயும் நடக்குது. இந்தக் கீரையைப் பாருங்க, எப்படித் தளதளன்னு இருக்குது? முன்னேயெல்லாம் இயற்கையா மொளைக்கிறதைத்தான் கீரேன்னு லேசாச் சொல்லுவோம். இப்ப நம்பத் தோட்டத் திலேயே பாத்திகட்டி வெதைச்சல்ல பயிர் பண்ணறோம்.

பரம: டேய் முத்தா இந்தக் கிள்ளுக்கீரை சங்கதியைப் போயி இவ்வளவு பெரிசாச் சொல்றியேடா!

முத்தன்: விட்டுடுங்க! இது வேணாம். இயற்கையா கெடக்கிறது தண்ணி. செயற்கையாக் கெணறு வெட்டித்தான் வெள்ளாமை பண்ணினோம், தண்ணி எறைக்க ஏத்தம் வச்சோம். மாடுகளைப்பூட்டி எறைச்சோம். இப்ப அதனாலே முடியாமெ பம்பு செட்டு வைக்கிறோம்.

பரம: யாரு? நம்பளா? டேய் முத்தா! பம்பு செட்டு, மோட்டாரு வைக்கிற கதையெல்லாம் எங்கிட்டே நடக்காதுடா நான் எங்கத் தாத்தா மாதிரியே விவசாயம் பண்றவன். அவரோட வழியிலேருந்து எள்ளுப் பிரமானம் தவறமாட்டேன். ஆமாம்.

முத்தன்: நீங்க தவற மாட்டிங்க எசமான் காலம் தவறிப்போச்சுங்களே. பறியிலே எறைச்சா தண்ணி பத்தலே. பம்பு செட்டு வச்சாத் தான் வெள்ளாமை நடக்கும். இல்லேன்னா எம்பது ஏக்கரா நஞ்செயும் கொறையாத்தான் கெடக்குமுங்க. ஏமேலே கோவிச்சுக்காதீங்க. இந்த சங்கதி கிள்ளுக் கீரையல்ல.

பரம: (பதறி) ஆங்! முத்தா! நெசமாவா சொல்றே?

முத்த: நெசந்தானுங்க. பம்புசெட்டு வைக்கலேன்னா இனிமே நானுங்கூட பண்ணையம் பார்க்கப் போகமாட்டேனுங்க !

பரம: முத்தா ! நீ என்னோட வேலைக்காரன்.என்னோட கொள்கைக்கு நீயா விரோதியா மார்றது ?

(அப்போது இளங்கோ வருதல்)

இளங் : அப்பா ! உங்கள் கொள்கைக்கு விரோதமாக என்ன செய்தானப்பா முத்தன் ?

பரம : இளங்கோ அநியாயத்தைக் கேளடா, நம்ப தோட்டத்திலே பம்பு செட்டு வச்சு விவசாயம் பண்ணனும்னு சொல்றாண்டா? இது அடுக்குமா ? -

இளங்கோ: இந்த தப்பான காரியத்தை மற்றவர்கள் செய்கிறார்களே அப்பா !

பரம: அடேய் ! பழக்க வழக்கம், பரம்பரையை மறந்திட்டு மத்தவங்க நடக்கலாம். நம்ப நடக்கலாமா ? இது வரைக்கும் நடத் திருக்கிறோமா ?

இளங்: இல்லையப்பா !

முத்த: ஏந்தம்பி இப்படிப்பொய் பேசுறீங்க கல்லூரியிலே நீங்க இப்ப பி.ஏ. வகுப்பிலே படிக்கிறீங்க ஒங்க தாத்தா இப்படி படிச்சாங்களா ? உங்கப்பாதான் படிச்சாங்களா?