பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சமண முனிவர்கள் தனித்தனி இருக்கைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த நகர்ப்புறத்தே, ஒரு சோலையில் தங்கினர்.


7. மதுரை மாநகரம்

மதுரைத் தென்றல்

மதுரை மாநகர்க்குச் சிறிது தூரத்திலேயே ‘மதுரைத் தென்றல்’ வீசியதைக் கோவலன் முதலிய மூவரும் அநுபவித்தனர். அஃது அகில் சாந்தம், குங்குமச் சாந்தம், சந்தனச் சாந்தம், கஸ்தூரிச் சாந்தம் முதலிய சேற்றில் படிந்து சேர்ந்த கழுநீர் மலர், சண்பக மலர் என்னும் இவற்றால் ஆகிய மாலையோடு குருக்கத்தி மல்லிகை, முல்லை என்னும் மலர்களில் பொருந்தி வீசியது; சமையல் அறைகளில் தாளிப்பு முதலிய புகை, அகன்ற கடை வீதியிடத்து அப்ப வாணிகர் இடைவிடாது சுட்ட அப்ப அகிற் புகையும், மைந் தரும் மகளிரும் மயிர்க்கும் ஆடைககும் மாலைக் கும எடுத்த அகிற் புகையும், யாகசாலை தோறும் ஆகுதி செய்ததால் எழுந்த புகையும் ஆகிய பல வேறுபட்ட புகையைத் தழுவி வீசியது. அத் தென்றல், சங்கப் புலவரது செந்நாவினால் புகழப்பட்ட இச்சிறப்புகளைப் பெற்றிருந்ததால் பொதியில் தென்றல்’ என்பதை விடச் சிறந்து விளங்கியது.

பலவகை ஓசைகள்

இறைவன் திருக்கோவிலிலும் மன்னவன் மணிக்கோவிலிலும் காலை முரசம் முழங்கினதால் உண்டான ஓசை மதுரை மாநகர்க்கு வெளியில்