பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ இ. தொல்காப்பியம். பொருளதிகாரம்

யமையாதவராதல் மே வற்று - மேவுதலையுடையது. மே வல்ஆணும் பெண்ணுமாய்ப் பொருந்தி வாழ்தல்.

'இன்பம் என்பது எல்லாவுயிர்க்கும் (பொதுவாகவுரியதாயி னும், ஈண்டுத்) தான் அமர்ந்து வரு உம் மேவற்று ஆகும் என இசையெச்சத்தால் வேண்டும் சொற்களை வருவித்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

உஉo. பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்.

இளம்பூரணம் :

என்-எனின். பரத்தையிற் பிரிவிற்கு உரியாரை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பரத்தையர் மாட்டு வாயில் விடுதல் நான்கு வருணத்தார்க்கும் உரித்து: அவ்வழிப் பிரியும் பிரிவு நிலம் பேயர்தல் இல்லை என்றவாறு.

எனவே, தன்னுாரகத்து ஞ் சார்ந்தவிடமுங் கொள்க. நால்வர்க் கும் உரித்து என்றமையான் நான்கு வருணத்துப் பெண்பாலாரும் அவளொடு ஊடப்பெறுப என்றவாறுமாம்.'

1 யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர்

ஊராண்மைக் கொத்த படி றுடைத்தது.' (கலி. அக.)

1. பரத்தையர்பால் தூது விடுதல் கான்கு வருணத்தார்க்கும் உரித்து எனவே கான்கு வருணத்துப்பெண்பாலாரும் பரத்தை காரணமாகத் தலைவனொடு ஊடப் பெறுவர் எனவும், பரத்தையிற் பிரியும் பிரிவு கிலம் பெயர்க் துறைதல் இல்லை யெனவே தன் னு ரகமும் அதனைச் சார்ந்த இடமும் பரத்தையிற் பிரியும் இட மாகக் கொள்ளப்படும் எனவும் விளக்கம் தருவர் இளம்பூரணர்.

நால்வருணப் பிரிவு தமிழகத்திற்பேசப்பட்டது தொல்காப்பியனார் காலத் திற்கு மிகவும் பிற்காலத்திலாதலால் இந்நூற்பாவில் 'கால்வர்' என்றது கால் வருணத்தினைச் சுட்டாது கானில மக்களையே குறித்தது எனக் கொள்ளுதல் வேண்டும்.