பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா சடி 「 ፫ &

உங்க. இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி

நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும் வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும் நல்வகை யுடைய நயத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமே.

இளம்பூரணம் :

என்-எனின். களவுக்காலத்துத் தோழிக்குரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள். ) இரந்து குறையுற்ற தலைமகனைத் தோழிநிரம்ப நீக்கி நிறுத்தலன்றி மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் தல்வகையுடைய நயத்தினாற் கூறியும் பல்வகையானும் படைத்து மொழிந்து சொல்லவும் பெறும் என்றவாறு.

உதாரணம் களவியலுட் காட்டப்பட்டனவுள்ளுங் காண்க நல்வகையுடைய நயத்திற்குச் செய்யுள் :

வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே அவையினும் பலவே சிறு கருங் காக்கை அவையினும் அவையினும் பலவே குவிமடல் ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுவாழ் சினையே,’’

இது மடலேறுவல் என்ற தலைவனைப் பழித்து அருளுடை. யீராதலான் மடலேறுவது அரிது என நயத்திற் கூறியது.

இதுவு மோர் மரபுவழு வமைத்தவாறு. (ச.உ)

நச்சினார்க்கினியம் :

இது, தோழி தலைவனைக் கூறுவனவற்றுள் வழுவமைவன கூறுகின்றது.

1. இது களவுக்காலத்தில் தன்பால் இரக்து குறையுற்ற தன்வைனைச் சேட்படுத்தற்கண்ணும் மடலேறுவேன்' எனத் துணிந்த தலைவனை மடல் விலக்கு தற்கண்ணும் தோழி தலைமகன் பால் கூற்று நிகழ்த்தற்குரிய முறைமையினை புணர்த்துவது இச் சூத்திசமாதலின் களவுக்காலத்துத் தோழிக்குரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று, எனக் கருத்துரை வரைக்தார் இளம்பூரணர்.