பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கோடுகளும் கோலங்களும்

காய்ந்து கொண்டிருந்தது. “செவுந்தி, இத. இவ இங்க கொஞ்ச நா இருக்கட்டும்மா உன் தங்கச்சி. நா. ஒரு ஹோம்ல வேல் செய்யிற. இவள அங்க வச்சிக்க எடமில்ல. எடமும் சரியில்ல. இங்க உன்தங்க மாதிரி நினைச்சிக்க. வேல செய்யிவா. தோதா ஓரிடம் பாத்திட்டு வந்து கூட்டிப் போறேன்.... உன் அம்மா எங்க?”

“அத்த வூட்டுக்குப் போயிருக்காங்க. அப்பா கழனிக்குப் போயிருக்காரு. கூப்பிட்டுட்டு வார சின்னம்மா...இருங்க..."

“பரவாயில்ல. அவ இருந்தா எதும் மனசு சங்கடப்படும்படி சொல்லுவா. பாடி, பரதேசின்னு நினைச்சிக்க. பொம்புளப் புள்ள. அதுக சரியில்ல. ஒரு நெருக்கடி அவுசரத்துல வுட்டுட்டுப் போற. ருக்கு ... இங்க இருந்துக்கம்மா...” என்று பையை வைத்து விட்டு விரைந்தாள்.

“யம்மா... நானும் வாரேன், எனக்கு...” அவள் படாரென்று வெளிக் கதவைச் சாத்திவிட்டுச் சிட்டாய்ப் போய் விட்டாள்.

செவந்திக்கு இது கனவா, நனவா என்று புரியவில்லை. அரை மணி நேரம் சென்ற பின் அம்மா பிள்ளைத்தாச்சிப் பெண்ணுக்கென்று இறைச்சிக் குழம்பு வாங்கிக் கொண்டு படியேறி வருகையில் கதவு சாத்தியிருந்தது.

“கதவ ஏன் சாத்தி வைக்கிற? ஏம்மா? அந்தக் குருசாமி கிராக்கு உன் தங்கச்சி வந்திருக்கா மகள அழைச்சிட்டு, போன்னுது. வந்தாளா?”

அவள் ஒலி தேயுமுன் பார்வை அந்தப் பையின் மீதும் தூணோடுதூணாக நிற்கும் ருக்குவின் மீதும் பட்டுவிட்டது.

“எங்கடீ வந்தாளுவ? பண்னதெல்லாம் பத்தாதுன்னு மிச்ச சொச்சத்துக்கு வந்தீங்களா?”

“யம்மா, நீ எதும்பேசாத, உன் வாய்க்குப் பயந்து அர நிமிசம் தங்காம சின்னம்மா போயிட்டாங்க, எனக்கு ஆளான பொண்ண வச்சிக்க எடமில்ல. ஹோமுல இருக்கிற எடம் தோதாபாத்திட்டுக் கூட்டிப் போறன். ரெண்டு மாசம் இங்க