பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


இன்ப வாழ்க்கை

கோவலன் தன் கருத்திற்கு இசைந்த காதலியான கண்ணகியுடன் மனம் ஒத்து இல்லறம் நடத்தி வந்தான். மனம் ஒத்த காதலர் நடத்தும் வாழ்க்கையே ‘இன்ப வாழ்க்கை’ எனப்படும் எல்லா வீடுகளிலும் இன்ப வாழ்க்கை இருத்தல் அரிது. ஏன்? ஒத்த குணமும் ஒத்த கல்வியும் ஒத்த பண்பும் இல்லாத ஆடவர்-பெண்டிர் திருமணங்கள் மிகுதியாக நடந்து வருதலே இதற்குக் காரணம் ஆகும். ஆடவன் சிறந்த படிப்பாளியாக இருப்பான்; அவனுக்கு வாய்த்த மனைவி கல்வி அறிவு அற்றவளாக இருப்பாள்; ஆடவன் ஒழுக்கம் உடையவனாக இருப்பான்; மனைவி ஒழுக்கம் தவறியவளாக இருப்பாள். கணவன் விரும்புவதை மனைவி விரும்பாள்; மனைவி விரும்புவதைக் கணவன் விரும்பான். கணவன் தன் உயர்ந்த நோக்கங்களைக் கூற, அவை இன்னவை என்ப தனையே புரிந்து கொள்ள முடியாத நிலையில் மனைவி இருத்தலும் உண்டு. இத்தகைய பல காரணங்களால், பெரும்பாலான இல்லங்களில் கணவன்-மனைவியர்க்குள் ஒத்த மனவுணர்ச்சி உண்டாவதில்லை. ஒத்த மனவுணர்ச்சி இல்லாத இடத்தில் வாழ்க்கை இன்பம் உண்டாதல் முயற் கொம்பே ஆகும். பெண்கள் ஆண்களைப் போலத் தாராளமாகக் கல்வி கற்க விடப்படின், எல்லாப் பெண்களும் கல்வி அறிவு நிரம்பப் பெறுவர். கல்வி அறிவு ஏற்படின் உலக அறிவு தானாக உண்டாதல் இயல்பு. பற்பல நூல்களை படிப்ப தனாலும் படி.த்தவருடன் பழகுவதனாலும்