பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கோடுகளும் கோலங்களும்

ஓட்னாருன்னு மொதலாளி நட்ட ஈடெல்லாம் ஒண்ணு மில்லன்னுட்டாங்க. சரக்கு ஏத்திப் போயிட்டுத் திரும்பி வாரப்ப விபத்தாயிட்டது. பங்காளிங்க, எங்க பங்குக்கு பிரிச்சித் தந்தது ரெண்டேக்கர். மானாவாரி. எப்பனாலும் மழ பெஞ்சிச்சின்னா பயிரு வைக்கலாம். எங்கூட்டுக்காரருக்கு முதலே பயிரு வேல பழக்கமில்ல. சின்னப்பவே லாரி கிளீனராப் போயிட்டாராம்.

“எங்க மாமியாதா அவ மருமகன் கூட முன்னெப்பவோ ஏரித் தண்ணி வந்தப்ப, பயிரு வைச்சாங்களாம். எள்ளு தூவி வைப்பாங்க. கேவுரு போடுவாங்க. அதும்கூட சரியாக் காவல் இல்லன்னா யாரும் பூந்து அறுத்திட்டுப் போயிடுவாங்க. ஆம்புள உரப்பா காவல் இல்லன்னு தெரிஞ்சா ஆடுமாடக்கூட இஷ்டத்துக்கு மேயவுடுவாங்க".

“அப்படி ஒரு ஞாபகம் இது. எங்க மாமியாளும் சீக்கு வந்து செத்துப் போச்சி. நா ரெண்டு புள்ளங்களக் காப்பாத்திப் பிழைக்கணுமே? கூலி வேலைக்குப் போவே. சாணி கொண்டாந்து ஒரு மூட்டை தட்டி விப்பே. நடவு, களையெடுப்புன்னு கும்பலா போறவங்க கூடப் போவே.. தனியாப் போனாலே எப்பிடி எப்பிடியோ பேசுவாங்க. பொம்புளயாப் பொறந்தாலே கஷ்டந்தாங்க."

“பெறகு இந்தத் தான்வா திட்டம் வந்திச்சி. இந்தம்மாமாருங்க காரப் போட்டுகிட்டு வந்தாங்க".

“நா அப்ப கூளம் கொண்டாந்து எருமுட்ட தட்டிட்டிருந்தே. இவங்க வாரதப் பாத்துப் பயந்து உள்ள ஒடிக் கதவப்போட்டுகிட்டே."

“ந்தாம்மா...? ஆரு, ஆரு உள்ள கதவத் தெறங்க!”

“இங்க ஆம்புள யாரும் இல்லிங்க. எங்கூட்டுக்காரு செத்திட்டாருன்னே. அழுக வந்திச்சி. 'நாங்களும் பொம்புளதாம்மா. நீங்க பயப்பட வேணாம். வெளில வாங்க'ன்னாங்க. கதவத் தெறந்தே. எனக்கு லாரிக்கார நட்டஈடு குடுப்பாங்கற ஆச அப்பவே போயிடிச்சி. அவன் குட்சிட்டுக் கொண்டு போய் மோதிட்டா, அவனால லாரியும் நட்டமாச்சி, சரக்கும் போச்சின்னு சொல்லிட்டாங்க. இப்ப லாரிக்காரங்க,