பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இந்நிலையிலே பலர் வெளிப்படையாகவும் தொலைபேசி வாயிலாகவும் நேரிடையாகவும், என்னைப் போற்றியது போலவே வேறுபலர் என்னைத் தூற்றவும் தவறவில்லை.

இவ்விருசாராரும் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவைப்படுபவரே. இலக்கியத் திறனாய்வு நூல்கள் தமிழில் மிக மிகக் குறைவு. இலக்கியத் தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு தகுதி வேண்டும். இத்தகைய பண்பாடு-பக்குவம் கொண்டுதான் ஆய்வுத் துறையில் அடி எடுத்துவைக்க வேண்டும். ஆனால் இங்கோ தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரனாகி விடுகிறான் !

இந்நூல் வெளிவருவதில் எனக்குப் பலவகையிலும் மனப்பிடிப்பு வல்லமை பெறுகிறது. சாகித்திய அகாடமியினரின் பரிசுபெற்ற இருவரையும் சித்தரிக்கச் செய்துவிட்டேன் அல்லவா!

வாசக நண்பர்களின் தொடர்ந்த அன்பும் ஆதரவும் எனக்கு இருக்கும்போது தலைக்கிறுக்கேறிய எழுத்து வியாபாரிகளைப்பற்றி எனக்கென்ன கவலை!

‘அலை ஓசை’ ‘அறுவடை’ ‘மலை அருவி’ ஆகியவை பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளைப் புதியனவாக எழுதிச் சேர்த்துள்ளேன்.

தொல்காப்பியர் நூலகத்தாரின் தெளிவும் இலக்கியத் துணிவும் பெரிதும் பாராட்டத்தக்கன. இவ்வரிசையில் மேலும் வர இருக்கும் என்னுடைய நூல்களைத் தொடர்ந்து வெளியிட முன்வந்துள்ளனர். அவர்கட்கு என் உளமார்ந்த நன்றி உரியது.

தஞ்சாவூர்
20-5-64

பூவை. எஸ். ஆறுமுகம்