பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


பிரபல கதாசிரியரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். இந்த ஒரு சம்பவந்தான் அவர் வாழ்க்கையில் ஆச்சரியமானது என்பதல்ல அவருடைய வாழ்க்கை முழுதும் ஆச்சரியமானது தான்.

மார்க்ட்வைன் ஏழைக் குடும்பத்தில் 1865ம் வருஷம் பிறந்தார். அவருடைய உண்மை பெயர் ஸாமுவேல்ஸாங்கர்ன் கிரிமன்ஸ். அவர் அமெரிக்காவில் மிஸேரி என்ற ஊரைச் சேர்ந்தவர். அவருடைய தகப்பனார் ஒரு விவசாயி. மேலும் மார்க்ட்வைனுடன் பிறந்தவர்கள் மூவர். இதனால் அவருடைய தகப்பனார் குடும்பத்தை நடத்தவே மிகவும் கஷ்டப்பட்டார்.

மார்க்ட்வைன் பெரியவனானதும் விளையாடத் தலைப்பட்டார். அவருக்குத் தெரிந்த நகைச்சுவைகளை, எல்லாம் நடைமுறையிலேயே செய்ய முற்பட்டார். இதைக் கண்டு பெற்றோர் மனம் வருந்தினர். பையனைப் பள்ளிக்கு அனுப்பினாலாவது திருந்துவான் என்று எண்ணினர். ஆனால், பள்ளியில் சேர்க்கப்பட்டபின்னும் மார்க்ட்வைனுடைய தொல்லை குறையவில்லை. அதற்கு மாறாக விளையாட்டுகள் அதிகமாயிற்று. மார்க்ட்வைனுடைய தாயார் அவரை நல்ல வழிக்குக் கொண்டு வர தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்தாள். அவளுடைய எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு மார்க்ட்வைன் படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.