பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


அமெரிக்காவில் பல இடங்களில் போட்டோ பிடிக்கும் கம்பெனிகளை நிறுவினார். இதன் மூலம் அவருடைய வருவாய் அதிகமாகியதுடன் பெயரும் பிரபலம் அடைந்தது. கெய்ஸர் அத்துடன் இருக்கவில்லை. அவர் போட்டோ தொழிலை ஒருவாறாக நடத்த ஏற்பாடு செய்து முடிந்ததும், ஒரு சிமென்ட் கம்பெனியில் வியாபார ஏஜெண்டாக வேலையில் அமர்ந்தார். இக் கம்பெனியில் அவர் திறமையாக வேலை பார்த்து, அதிக ஊதியம் பெற்றார். அவருக்குக் கிடைத்த ஊதியத்தை அவர் செலவு செய்யாமல் சிமென்ட் மூட்டைகளை வாங்கி பத்திரப்படுத்தினார். அதைத் தனியே வியாபாரமும் செய்து வந்தார். இச்சமயத்தில் தான் சிமென்டுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. அப்பொழுது அமெரிக்காவிலேயே கெய்ஸர் ஒருவரிடந்தான் அதிகமாக சிமென்ட் இருந்தது. அதைப் பலர் விலைக்குக் கேட்டும் கெய்ஸர் விற்க மறுத்துவிட்டார். கடைசியாக சிகாகோ நகரத்தைச் சேர்ந்த பிரபல கட்டிட காண்டிராக்ட் கம்பெனி ஒன்று அவரை தமது கம்பெனியில் பங்குதரராகச் சேர்த்துக்கொண்டது. அக்கம்பெனிக்கே கெய்சர் தாம் சேர்த்து வைத்திருந்த சிமென்ட் மூட்டைகளை எல்லாம் நல்ல லாபத்திற்கு விற்றார். இக்கம்பெனி மூலம் கெய்ஸர் கட்டிட வேலைகளைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டார். பெரிய பெரிய அணைக்கட்டுகள் கட்டுவதற்கு காண்டிராக்ட் எடுக்கச் சொல்லி, தாமே நேரில் இருந்து கட்டி முடித்தார் பிறகு அந்தக் கம்பெனியிலிருந்து விலகி, சொந்தமாகவே