பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

59


தீர்மானத்துடன் அவர் நின்றுவிடவில்லை முதலில் பல இடங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக கப்பல் படையில் சேர்ந்து நல்ல பயிற்சி ஏற்பட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு இணங்க அவர் கப்பல் படையில் சேர்ந்து பதினான்கு ஆண்டுகள் பல நாடுகளுக்கும் சென்றுவந்தார். பிறகு ஊர் திரும்பியதும் கல்லூரியில் சேர்ந்தார். கப்பல் படையில் இருந்தால் தன்னால் வட துருவத்திற்குப் போக முடியாது என்பதை உணர்ந்த அவர் அதற்கு ஒரு தந்திரம் செய்தார். கப்பல் படையிலிருந்து விலகிக் கொள்வதற்கு தம்முடைய உடலில் ஏதாவது ஒன்றை ஊனமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார். அதன்படியே, கல்லுரியில் நடக்கும் குத்துச் சண்டை, மல்யுத்தம் முதலிய வகுப்புகளில் சேர்ந்து பழகினார். ஒருநாள் வேண்டுமென்றே மல்யுத்தம் செய்யும் போது கால் எலும்பை முறித்துக்கொண்டார். இக்காரணத்தால் அவர் தம்முடைய இருபத்திநான்காவது வயதில் கப்பல் படையிலிருந்து விலக்கப் பட்டார். கப்பல் படையிலிருந்து விடுதலை கிடைத்ததும் விமானம் ஓட்டக் கற்றுக்கொள்ள நினைத்தார் விமானம் ஒட்டுவதற்கு கால்கள் நன்றாக இருக்க வேண்டும். ஒரு கால் ஊனமான அவருக்குப் பயிற்சி அளிக்க மறுத்தனர். ஆனால், பெருத்த முயற்சி செய்து பையர் விமானம் ஒட்ட கற்றுக் கொள்ளும் வசதியைப் பெற்றார். கால் ஊனமான காரணத்தால், அவர் இரண்டு தடவை விமானத்தை வேறு ஒரு விமானத்தின் மீது