பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


போகிறாள். பிறகு, ஒரு முயலினுடைய வலையில் இறங்கிப்போய் ஒரு அற்புதத் தீவை அடைகிறாள். அங்கு கண்ட அதிசயங்கள் பல. அதைப் படித்து முடித்த பிறகு, புத்தகமாக வெளியிட அவர் விரும்பவில்லை. அதனால் தம்முடைய மதிப்பே போய்விடும் என்று கருதி, ஒரு மூலையில் அக்கதையின் கையெழுத்துப் பிரதியைப் போட்டுவிட்டார்.

பல வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் ஒரு நண்பர் அவரைக் காணவந்தார். நண்பர் கண்ணில் “அற்புதத் தீவில் அலைஸ்” தென்பட்டது. அதை எடுத்துப் படித்தார். கதைப்போக்கு அவருடய மனதைக் கவர்ந்தது அதனால் அதைப் புத்தகமாக வெளியிட அவர் விரும்பினார். டாட்ஸ்னோ அதை வெளியிட விரும்பினாலும், தம்முடைய பெயரை உபயோகிக்கக்கூடாது என்று கூறினார் அவர் விருப்பப்படியே லூயிஸ்கரேல் என்ற புனைபெயரில் அப்புத்தகம் வெளியாயிற்று.

மதிப்பே போய்விடும் என்று எண்ணிய டாட்ஸ்ன் பிற்காலத்தில் “அற்புதத் தீவில் அலைஸ்” இவ்வளவு பிரபலமாகும் என்பதைக் கற்பனைகூடச் செய்து பார்த்திருக்க மாட்டார் அல்லவா?