பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

39


சட்டக்கல்லூரியில் சட்டப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். மாதம் 900 டாலர் சம்பளம் என்று கூறினார். இதைக் கேட்டதும் வெண்டலுக்கு நம்பவே முடியவில்லை. இம்மாதிரியான பெரிய பதவி தமக்குக் கிடைக்குமா என்ற ஆச்சரியப்பட்டார்.

வெண்டலின் பள்ளிப் படிப்பு முடிந்ததும் சட்டப் படிப்புப் படிக்க முனைந்தார். இதைக்கண்ட அவரது தகப்பனார் மனம் வருந்தினார். அந்தக் காலத்தில் அமெரிக்காவில் வக்கில் உத்தியோகம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்காது. மேலும், அப்போது வெண்டலுடைய குடும்பம் மிகவும் வறுமையில் இருந்து வந்தது. அதனால், வருமானம் இல்லாத வக்கீல் படிப்பை விட்டுவிட்டு, வேறு படிப்பில் கவனம் செலுத்துமாறு வெண்டலிடம் அவர் தகப்பனார் கூறினார். அந்தச் சமயம் அமெரிக்காவில் உள் நாட்டு கலகம் மூண்டது அதற்கு இளைஞர்கள் தேவை என்று அரசாங்கம் அறிவித்ததும் வெண்டல் சட்டப் படிப்பை விட்டு ராணுவத்தில் சேர்ந்தார்.

வெண்டல் தம் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்; எவருக்கும் அஞ்சாதவர், தயவு தாட்சண்யமின்றி நடுநிலையிலிருந்து எதையும் செய்யக்கூடியவர். அவருடைய பயமற்ற தன்மையையும், வேலையில் இருந்த ஆர்வத்தையும் விளக்க ஒரு சம்பவத்தைக் கூறலாம். உள்நாட்டு கலகத்தின்போது அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த