பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“வளைபயில் கீழ்கடல் நின்றிட
மேல்கடல் வானுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத் தொல்லோன் கயிலைத்
கிளைவயின் நீக்கி இக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவைஅல் லால் வியவேன் நய
வேன்தெய்வம் மிக்கனவே!??”

நல்வினைப் பயனாகவும் விதிவசமாகவும் விட்டகுறை -தொட்டகுறையின் படைப்புச் சிக்கலின் விளைவாகவும் எதிர்ப்பட்டு, உள்ளம் கவர்ந்த தலைவன்-தலைவியின் பக்திநயக் காதற் பாட்டுக்கு ஓர் உதாரணமாகவும் இங்கே நாம் சீதாவையும் ராகவனையும் காண்கிறோம். ஆம்; சீதாவின் பேசும் கண்கள் ராகவனிடம் என்ன ‘அந்தரங்கம்’ செப்பினவோ? “மணந்தால் நான் சீதாவைத்தான் மனப்பேன்!” என்கிறான் ராகவன்.

அவன் தீர்ப்பு மனப்பந்தலை உருவாக்குகிறது.
கொட்டு மேளம் முழங்குகிறது.
இப்பொழுது சீதா, திருமதி ராகவன்!...

கிழக்கும் மேற்கும்

‘கிழக்கே சூரியன் மட்டும் தோன்றவில்லை. மனித நாகரிகமும் கிழக்கேதான் தோன்றிற்று.’-இதையொட்டிய மனிதகுலச் சரித்திரத்தில் மேற்கும் இடம் கண்டது. இப்படிப்பட்ட திசை மாற்றங்களும் திசைச் சந்திப்புக்களும் நமக்குப் புதிதாக இலங்கினாலும், வரலாறு காட்டுகிற ஆதி நாகரிகத்தினின்றும் முன்னேறி

22