பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெறாமல் போகவே அத்துறையில் உழைத்து, வெற்றி ஈன்ற பெருமிதமும் ‘கல்கி’க்கு உரியன.

நாட்டுப் பாசத்தையும் பெண்களின் மகிமையையும் வெற்றிச்சங்கம் முழக்கிச் சொல்லி, வெற்றித்தூணாக விளங்கச் செய்தவை, ‘தியாக பூமி’ - ‘சேவாசதனம்!’

இவ்விரண்டையும் விட, ஒளிச்சிறப்பும் ஒலித் தெளிவும் கொண்ட பெரிய நவீனம், அலை ஓசை!

இது சாகித்திய அகாடெமியின் (Sahitya Academy) பரிசைப் பெற்று உயர்ந்தது.

சாகித்திய அகாடெமி, இதற்குப் பரிசைக் கொடுத்து உயர்ந்தது!

சீதா அபலைதான்.

ஆனால் அவளுக்குச் சேர்ந்திருக்கிற இலக்கிய அந்தஸ்து (Literary Merit) க்கு ஈடு ஏது, எடுப்பு ஏது?

“நான் எழுதிய நூல்களிலே ஏதாவது ஒன்று ஐம்பது, நூறு வருஷங்கள் வரை நிலைத்து நிற்கும் தகுதியுடைய தென்றல், அது அலைஓசைதான் என்ற எண்ணம் எனக்கு உண்டு!” என்று தம் முன்னுரையில் வரம்பறுத்துச் சுட்டுகிறார் ஆசிரியர். “அலைஓசையை நான் எழுதியதாகவே எண்ணக்கூடவில்லை. லலிதாவும் சீதாவும், தாரிணியும் சூரியாவும், செளந்தரராகவனும் பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆசாபாசங்களையும் உள்ளக் கிடக்கைகளையும் ‘அலை ஓசை’ மூலமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்கள் என்று எண்ண

17