பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

கள்’ பாடுவதில் விருப்பம் கொண்டவள். பலவகைப் பாக்களில் அவளது உள்ளத்தைக் கவர்ந்தது வெண்பாவே ஆகும். இங்ங்ணம் கண்ணகி குழைந்த அன்பினாற் பாடும் செய்யுட்களைக் கோவலன் படித்தும், கண்ணகி பாடக் கேட்டும் இன்பக கடலில் மூழ்குவான்.

இசை - விருந்து

கண்ணகி யாழ் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள். கோவலனும் அக்கருவி மீட்டிப் பாடுதலில் வல்லவன். அதனால், அவர்கள் அடிக்கடி யாழ் வாசித்துப் பாடுதலில் ஈடுபட்டு இருந்தனர். அக் காலததில் தமிழ்ப் பண்புகள் வழக்கில் இருந்தன. அவை குரல் துத்தம், கைக்கிளை, இளி, உழை, விளரி, தாரம் என்று ஏழாகும். இவை ஏழ் இசை எனபபடும். இந்த ஏழிசையிலும் கண்ணகியும் கோவலனும் வல்லவராக விளங்கினர். கண்ணகி யாழை மீட்டிக் குரல் எடுத்துப் பாடும்பொழுது கோவலன இசை இன் பத்தில் ஈடுபட்டிருப்பான். அவ்வாறே அவன் யாழ் இசைத்துப் பாடுங்கால் கண்ணகி பரவசமாதல் வழக்கம்.

நலம் பாராட்டல்

இவ்வாறு ஒத்த கருத்தும் ஒத்த செயலும் உடைய மணமக்கள் உயிரும உடம்பும் போலவும் நகமும் தசையும் போலவும் மலரும் மணமும் போலவும் வாழ்ந்து வந்தனர். கண்ணகியின் குண நலங்களில் ஈடுபட்ட கோவலன் அவளை,

"மாசறு பொன்னே! வலம்புரி முத்தே
காசறு வியையே கரும்பே தேனே !

சி-2