பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலியழிப்பது பெண்க ளறமடா;
கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்!”

வணக்கத்துக்கும் வாழ்த்துக்கும் உரிய வகையில் உலவிய பெண்மணிகளின் தடத்தை ஒட்டி நடந்தும், ஒற்றி கடக்க முயன்றும் வருகிற புதிய பரம்பரையினருக்கு அமரகவியைப்போல தூண்டுதல் கொடுத்து முடுக்கிவிட வேறுயாரால் முடியும்?

கதம்பமணம் அற்புதம்!

நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர், எர்னஸ்ட் ஹெமிங்வே(Ernest Hemingway). அவர் தம்முடைய நோபல்பரிசுப் பேச்சின் சமயம், குறிப்பிட்டுப் பேசிய மையச்செய்தி ஒன்று என்கருத்தை ஈர்க்கின்றது. “எழுத்துத் துறையில் இதுவரை யாரும் செய்யாததை - அல்லது, செய்ய முயற்சி செய்து தோற்ற விஷயத்தை மனத்தில் பதித்து எழுத வேண்டியதே உண்மையான - சிந்தனைமிக்க எழுத்தாளனது கடமையாகவேண்டும்!”

முதுபெரும் எழுத்தாளர் ஹெமிங்வேயை எண்ணிக்கொண்டு, நம் அருமைத் தமிழ்மண்ணை எண்ணிப் பார்க்கிறேன்.

என் கவலைக்கு வைகறையாகிறது ஒருபெயர்; என் கனவுக்கு நனவாகிறது ஒருபெயர்.

‘கல்கி’ என்ற அம்மூன்றெழுத்துப் பெயர் களிதுலங்கக் காட்சி தருகிறது.

மற்றவர்கள் செய்யாததைச் செய்துகாட்டிய பெருமையும், ஒருசிலர் செய்ய முயற்சி செய்து வெற்றி

16