பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்றனவா? ‘ஒரு சிலரை’ப்போல, நானும்தான் கேள்வி தொடுக்கிறேனே என்று முகத்தைச் சுளித்துக்கொள்கின்றீர்களா? என் கேள்விக்கு விடை சொல்ல எனக்குப் பயிற்சியுண்டு; பக்குவமும் உண்டு. -

வெறும் கண்ணாடி பீரோக்களிலே வைத்துச் சோடித்து, அழகு பார்த்து அனுபவிக்கப் பயன்படும் வார்த்தை ஜாலங்கள்தாம் இந்த இலட்சியங்கள்!...


மதுரையில் பூரணி

‘குறிஞ்சிமலர்’க்கதை சாதாரணமானது. ஏனென்றால், அது சாதாரணமான மக்களைச் சுற்றியே செல்கிறது; சொல்கிறது! அது மட்டுமா?

சாதாரண மனிதர்களென்றால், அதற்காக, அவர்களிடம் காணப்பெறும் மனங்களும் ஆசைகளும் அபிலாஷைகளும் சாதாரணமாகவேதான் இருக்க வேண்டுமென்று நியதி ஏதும் பாடம் கற்பித்துக்கொடுக்க வில்லையே?

பூரணி என்று அவளுக்குப் பெயர். அவள் மானுடப் பிறவி, மனிதப் பிறப்பெனில், சாதாரணமாகத்தான் இருந்தாக வேண்டும். ஆயினும், அவள் அசாதாரணமானவள். ஆமாம், அப்படித்தான்!

‘பூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப்போல் அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள், உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு.

51