பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மா தவம் புரிவாள் 4. பண்பாட்டால் பெற்ற பெயர்கள் 4-1 & 2 அக்கினிச்சலம்-சிவம் குப்பை மேனிக்கு, சா. சி. பி. அகர முதலியில் அக்கினிச் சலம் என்னும் பெயரும், வை, ம, அகராதியில் அக்கினிச் சிவம் என்பதும், சி.வை. அகராதியில் அக்கினிச்சிவச் செடி என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை சிவன்தொடர்பான பெயர்கள். 4.1-2-1 கெருப்புக் கடவுள்: திருமாலை நீர்க் கடவுள் என்றும், சிவனை நெருப்புக் கடவுள் என்றும். கூறுவர். திருமாலுக்கு. நாராயணன் என்ற பெயர் உண்டு. நாரம் என்றால் தண்ணிர்; அயணம் என்பது செலவு - சென்று தங்கும் இடம் என்பதைக் குறிக்கும், தண்ணிரை இருப்பிடமாகக் கொண்டவன் நாராயணன்; பாற்கடலில் பள்ளி கொண்டவன் அல்லவா? சிவன் நெருப்பு (சோதி) வடிவானவர். நெருப்போடு நெருங்கிய தொடர்புடையவர். சிவன் சிரிப்பு நெருப்பால் முப்புரம் எரித்தார், நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார்; நக்கீரர்க்கு வெப்பு நோய் தந்தார். அவரிட மிருந்து வந்த ஆறு தீப்பொறிகள் முருகனாக மாறின, அண்ணாமலையில் நெருப்பு மலையாய் நின்றார்; அழலை ஏந்திக்கொண்டுள்ளார்; இறுதியில் உலகைச் சுட்டெரித்த சுடுகாட்டு நெருப்பில் நின்று ஆடுபவர் நிகண்டுகளில், சோதி, ஒளி, அழலேந்தி, அழலது ஏந்தி, அழலாடி, ஆரழலாடி, முதலிய நெருப்பு தொடர் பான பெயர்கள் சிவனுக்குத் தரப்பட்டுள்ளன. ஒளி வனர் விளக்கே எனத்திருமாளிகைத் தேவரின் திருவிசைப்பாவும், சோதியே சுடரே சூழொளி விளக்கே’’ எனத் திருவாசகம் அருட்பத்தும் சோதியாய்த் தோன்றும் உருவமே' எனத்