பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


உடனே பொற்கொல்லன், “ஐயனே, அவசரமான செய்தி ஒன்று உண்டு. அரச மாதேவியார் சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் தமது காற் சிலம்பு ஒன்றைப் பழுது பார்க்க கொடுத்திருந்தார். அஃது எவ்வாறோ மாயமாய்க் காணாமற் போனது. நான் பல இடங்கட்கும் ஆட்களை அனுப்பித் தேடி அலுத்தேன். அதனைத் திருடிய கள்வன் இன்று தானே வந்து என்னிடம் அகப்பட்டிருக்கிறான். “நீ இதனை விலை மதிக்க வில்லையோ?” என்று கேட்டான். சிலம்பு அவன் கையில் இருக்கின்றது", என்றான்.

‘அரச மாதேவியின் சிலம்பு கிடைப்பின், அஃது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஊட்டும்’ என்று அரசன் எண்ணினான்; உடனே அவள் சொன்ன “தலைவலி அவன் நினைவுக்கு வந்தது. அதனால் அரசன் அவசரத்தில் காவலரை அழைத்து, “இப் பொற்கொல்லன் கூறும் கள்வனிடம் சிலம்பு இருக்குமாயின், அக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக", என்று கட்டளையிட்டு அந்தப்புரம் சென்றான்.

களவு நூல் கற்ற கள்வர்

பொற்கொல்லன் தன் எண்ணம் பலித்தது என்று மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அவன் காவலருடன் விரைந்து சென்று கோவலன் தங்கி இருந்த இடத்தை அடைந்தான்; சிறிது தூரத்தில் நின்று கொண்டே கோவலனைச் சுட்டிக காட்டினான். காவலர் கோவலனைக் கூர்ந்து கவனித்தனர்; அவனது மாசற்ற முகத்தைக் கண்டனர்; “இவன் கள்வன் அல்லன்,” என்றனர். உடனே பொற் கொல்லன், ‘ஐயன்மீர் இவன் பண்பட்ட கள்வன்;