பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 123 சாறு, துத்தநாகத்தைத் தூய்மை செய்து தூள் (பஸ்பம்) ஆக்க உதவும் என்று தெரிகிறது. இந்தத் தூளுக்கு நாக பசுபம்’ என்று பெயர் சொல்லப்படுகிறது. இது மூல நோய்க்கு (Piles) நல்லது என்றும் சொல்லப்படுகிறது. பல்லழகி முதல் நாகத்தைச் சூரண மாக்கி வரையுள்ள ஆறு பெயர்கள் பயனால் பெறப்பட்டவையாகும். 4. வடிவால் வந்த பெயர்கள் 4-1,2,3 வடிவழகி-சுந்தரமாது வடிவழகி, சுந்தரமாது, சித்திரப்பெண் (சா.சி.பி.) என்னும் பெயர்களும் உண்டு. வெற்றிலையின் வடிவம் காண்பதற்கு அழகாயிருப்பதால் வடிவழகி என்னும் பெயர் வந்தது. சுந்தர மாது என்றால் அழகிய பெண். இப்பெயரும் வடிவழகி போன்றதே. சித்திரப் பெண் என்பதும் அன்னதே. சித்திரம் என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருள் உண்மையை, பெருங்கதை வத்தவ காண்டத்தில் உள்ள 'வித்தக வினைஞர் சித்திர மாக - உறழ்படச் செய்த ஒண்பூங் காவின்' (4-7-149, 150) என்னும் பாடல் பகுதியால் அறியலாம். 4.4 செந்துளிர் மேனிக்கொடி வெற்றிலைக் கொடியில் உள்ள செந்துளிர் காண்பதற்கு மேனியாக - வடிவழகாக இருப்பதால், அக்கொடிக்கு "செந்துளிர் மேனிக் கொடி (சி.வை.அ.) என்னும் பெயர் ஈயப்பட்டது. 4-5, 6,7 சூல் - சூலினி - கணிச்சி சூல் (சா.சி.பி.), குலினி (மு.வை.அ., சி.வை.அ.), கணிச்சி (ஜூபிலி), கணிச்சியிலை (சி.வை.அ.) என்னும்