பக்கம்:தமிழ் அங்காடி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 தமிழ் அங்காடி


வரலாறு

மேலை நாட்டில் நாகரிக வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிப்படை போட்டவர் அரிஸ்ட்டாட்டில். இவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ’ஸ்டாகிரா’ என்னும் ஊரில் கி. மு. 384 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவருடைய தந்தை, மகா அலெக்சாந்தரின் தந்தையான பிலிப்பின் அரசவை மருத்துவராக இருந்தார். இவர் அறிவியல் அறிஞரும் ஆவார். இவர் தம் மகன் அரிஸ்ட்டாட்டில் அறிவியல் துறையில் வல்லவராவதற்கு உரிய எல்லா வாய்ப்பு வசதிகளையும் செய்து கொடுத்தார். விளையும் பயிரான அரிஸ்ட்டாட்டில் முளையிலேயே அறிவுக் கூர்மையில் முனைப்புடன் திகழ்ந்தார். தொடக்கக் கல்வி ஊரிலே பெறப்பட்டது.

இப்போது கிரீஸ் நாட்டின் தலைநகராயுள்ள ஆதன்சு நகருக்குத் தம் பதினெட்டாம் வயதில் மேல்நிலைக் கல்வி கற்கச் சென்றார் அரிஸ்ட்டாட்டில். அங்கே, தத்துவ மேதை சாக்ரடீசின் மாணாக்கரான பிளேட்டோவிடம் கல்வி கற்றார். கி. மு. 347 வரை ஆதன்சில் கல்வி பயின்றார்.

கி. மு. 342 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பின் வேண்டுகோளை ஏற்று மன்னனின் மகன் அலெக்சாந்தருக்கு ஆசிரியர் ஆனார்.

அலெக்சாந்தர் பல நாடுகளை வென்று தம் அரசை விரிவுபடுத்தினார். அரிஸ்ட்டாட்டிலோ பல ஆய்வுகள் புரிந்து தம் அறிவை விரிவுபடுத்தினார்.

கி. மு. 335ஆம் ஆண்டு ஆதன்சு நகரில் அரிஸ்ட்டாட்டில் ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்தினார். அதன் பெயர் ‘பெரிபாட்டெட்டிக்’ என்பதாம். இதன் பொருள் 'உலாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/8&oldid=1210586" இலிருந்து மீள்விக்கப்பட்டது