பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

77


அதனால் அவர் ரயில் நிலையத்தில் கூலிவேலையிலிருந்து பல தொழில்களைச் செய்தார். கூலி கிடைக்காத நாட்களில் அவர் பட்டினியாகவும் இருந்திருக்கிறார். ஒரு நாள் இப்படித்தான் அவருக்கு கூலி ஏதும் கிடைக்காமல் போயிற்று. அன்று அவருக்கு பசியின் கொடுமையால் களைப்பாக இருந்தது. களைப்பின் மிகுதியால் அவர் ஒரு கூட்ஸ் வண்டியின் அடியில் படுத்துத் தூங்கிவிட்டார். ரயில்வே போலிஸார் அவரைக் கைதுசெய்து விசாரணைக்கு மாஜிஸ்டிரேட் முன் கொண்டு நிறுத்தினர். தம்முடைய நிலையை அவர் மாஜிஸ்டிரேடிடம் கூறியும், அவருக்கு ஒரு மாதச் சிறை தண்டனை கிடைத்தது பெரியவர்களிடம் அடியும், போலீசாரின் தொந்தரவும் அவர் மனதைப் பெரிதும் துன்புறுத்திவிட்டது. அவர் கப்பல் வேலையில் சேர்ந்தார். அவ்வேலையும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கப்பல் வேலையில் சேர்ந்ததின் மூலம் அவருக்குப் புத்தகம் படிக்கும் ஆவல் ஏற்பட்டது நண்பர்களிடம் எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்டு, புத்தகங்களைப் படிக்கலானார்.

கப்பல் வேலையைவிட்டு விலகிய ஜாக்லண்டனுக்கு படிப்பின் மீது கவனம் சென்றது. ஆனால், பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு அவரிடமோ பணம் இல்லை. அதனால், கல்வி அறிவை விருத்தி செய்து கொள்ள இலவச நாடகத்திற்குச் சென்று புத்தகங்களைப் படிக்கலானார். ஒரு நாள், தீரச்செயல்கள் நிரம்பிய புத்தகம் ஒன்றைப் படித்தார்.