பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சயங்கொண்டார்

143


புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்
தொழில் காட்டப் புவன வாழ்க்கைச்
செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப்
புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்[1]

என்ற தாழிசையாலும், திருமால் முதலிய ஏனைய தேவர்க்கும் வணக்கம் கூறப் பெற்றிருப்பினும் சிவ பிரானது வணக்கம் முதலில் கூறப் பெற்றிருப்பதாலும், உமாதேவி, ஆனைமுகன், முருகவேள், உமா தேவியின் அம்சமாகிய அன்னையர் எழுவர் ஆகியோருக்கெல்லாம் தனித்தனி வெவ்வேறு வணக்கம் கூறப் பெற்றிருப்பதாலும் இவரைச் சைவ சமயத்தினர் என்று சற்று உறுதியாகவே கூறலாம். நான்முகன், திருமால் முதலியவர்கட்கும் வணக்கம் கூறியிருப்பதால் இவர் சமரச நோக்கென்னும் பொது நோக்குடையவர் என்பதையும் அறியலாம்.

காலம்

முதலாம் குலோத்துங்கன் (கி. பி. 1070-1118) கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். இரண்டாம் கலிங்கப் போர் நடைபெற்றது கி. பி. 1112-ல். இந்தப் போரைத்தான் சயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியின் காவியப் பொருளாகக் கொண்டார், எனவே, சயங்கொண்டாரின் காலமும் குலோத்துங்கனின் காலமும் ஒன்றே என்று கொள்ள வேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால் இக்கவிஞர் கம்பருக்கு முந்தியவர் என்பது பெறப்படுகின்றது. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் கம்பர் தன் காவியத்தை கி. பி. 1178-ல் பாடி முடித்து கி. பி. 1185-ல் அரங்கேற்றினர் என்ப


  1. தாழிசை-1.