பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

சிக்கல் தீர நீதியந் தலைவர் கூறும் தீர்ப்பை அறிந்து கொள்ளலாம். இது ஐந்தாம் பகுதியாகும்.

அடுத்து ஆறாம் பகுதிக்குச் செல்வோம்-வாருங்கள். எழுத்தாளர் பகுதியாகிய இங்கே ஒர் எழுத்தாளர் உள்ளார். அவர் உரை நடை எழுதுவதிலே மிகவும் வல்லவர். அவரது உரை நடையின் சிறப்பை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

இது ஏழாம் பகுதி-அச்சுப் பதிப்புப் பகுதி, ஒலைச் சுவடிகளில் உள்ளவற்றை அச்சில் பதிப்பிக்கும் ஓர் அறிஞரை இங்கே காணலாம். என்னென்ன நூல்களெல்லாம் பதிப்பித்திருக்கிறார் என்பதை இங்கே அறியலாம்.

இதோ எட்டாம் பகுதியாகிய தன் வரலாற்றுப் பகுதிக்கு (Autobiography) வந்து விட்டோம். இங்கே ஒருவர் தன் வரலாற்றிலிருந்து ஒரு சிறு பகுதியை நமக்கு அறிவிக்கிறார்.

அடுத்து, ஒன்பதாவதாகிய இந்த வரலாற்றுப் பகுதியில், வரலாறு பற்றியும் அதை அறிந்து கொள்ள உதவும் துணைக் கருவிகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இதுதான் பத்தாம் பகுதி-உலகப் பொது அறிஞர் பகுதி. இங்கே, பேரறிஞர்கள் இருவர், உலக உயிர்கள் நன்முறையில் வாழ்வதற்கு உரிய பொதுவான புரட்சிக் கருத்துகளைக் கூறுவதை அறியலாம். அவ்விருவரும் ஒத்த கருத்து உடையவர்கள் என்பதும் புலப்படும்.

இதோ நகைச் சுவைப் பகுதி பதினொன்றாவதாகஉள்ளது. இவ்வளவு நேரம் பார்த்து வருவதால் உண்டான அலுப்பு தீர, இங்கே பலவகைப் பைத்தியங்கள் உளறுவதை அறிந்து நகைத்து மகிழலாம்.