பக்கம்:வைணமும் தமிழும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ ஆசாரியர்கள்

149


அணிக்கிரகம், (2) உடையவர்தானே திருநாராயணபுரத்தில் ஐம்பத்திருவர்க்காக ஏறியருளப் பண்ணியது; (3) கந்தாடையாண்டான் திருப்பெரும்புதூரில் நிறுவச் செய்து அதனை உடையவர் ஆலிங்கனம் செய்தது, (4) பின்பு கந்தாடை யாண்டான்நம்பெருமான் நியமனத்தினால் அருளப்பண்ணியது. கந்தாடையாண்டானும், பட்டரும் அவர் திருநட்சத்திரங்கள் தோறும் பெருவிழாவாக நடத்திக் கொண்டிருந்தனர். இவருக்குப் பாலமுதம் காய்ச்சும் கைங்கரிய பரர்கிடாம்பிப் பெருமாளும், வடுக நம்பியும், பிரசாதம் தயாரிக்கும் கிடாம்பியாச்சானும் திருமடைப்பள்ளித் தொண்டர்கள். இவர்தம் அருளிச் செயல்கள்; 'ஸ்ரீபாஷ்யம், வேதாந்தசாரம், வேதாந்ததீபம்,வேதாந்த சங்கிரகம், கத்தியத்திரயம், நித்தியம், கீதாபாஷியம்' ஆகிய ஒன்பது வயது 120.

இராமாநுசருக்குப் பின் சில ஆசாரியர்கள் சில வட மொழி-தென் மொழி அருளிச் செயல்கட்குப் பொருளுரைப் பதில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிளவுகள் ஏற்பட்டு வடகலை தென்கலை சம்பிரதாயமாகப் பிரிந்தனர். வடகலை ஆசாரிய பரம்பரை, தென்கலை ஆசாரிய பரம்பரை என்று இரு ஆசாரிய பரம்பரைகள் வளர்ந்தன. முன்னவர் வடமொழி நூல்கட்கு முன்னுரிமையும், அருந்தமிழ்நூல்கட்குப் பின்னுரிமை தருவதாகவும்; பின்னவர் ஆழ்வார் அருளிச்செயல்கள் போன்ற தமிழ்நூல்கட்கு முன்னுரிமையும், வடமொழி நூல்கட்குப் பின்னுரிமையும் தருவதாகச் சொல்வர். வெளிப்படையாக வடகலையார் திருமண்காப்பில் பாதம் இல்லை; தென்கலையார் திருமண் காப்பில் பாதம் உண்டு. இல்லத்தில் பிற லெளகிக நிகழ்ச்சிகளிலும் சிலவேறுபாடுகள் உண்டு.

t