பக்கம்:வைணமும் தமிழும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

வைணவமும் தமிழும்


திருநாமம் வந்து "நடாதூரம்மாள்” என வழங்கப்பெற்றார். மற்றொரு நாள் இவர் காட்டுவழியே திருவேங்கடத்தை நோக்கிச் செல்லுகையில் வழியில் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கத் தகுந்த இடம் வாய்க்காமல் இருந்தது. இதனால் இவர் பெருமாளுக்குத் திருவாராதானம் செய்ய முடியாமல் உபவாசமாக இருந்தார்.திருவேங்கடமுடையானே ஒரு வேதியன் வடிவில் பிரசாதம் கொணர்ந்து 'இது பெருமாளுக்கு ஆராதனம் செய்தது' என்று சொல்லிக் கொடுக்க அதே அம்மாள் அமுது செய்ததும் வேதியனாக வந்த வேங்கடமுடையான் மறைந்தருளினான்.

(4). கிடாம்பிஅப்புள்ளார்: (பிறப்பு. கி.பி.1221), இவருக்கு ஆத்ரேய இராமாநுசர் என்ற பெயரும் உண்டு இராமாநுசருக்கு மடைப்பள்ளி கைங்கரியம் புரிந்து வந்த கிடாம்பி ஆச்சானின் கொள்ளுப் பேரர். வாத்சய வரதாசாரியரின் சீடர். 'நித்தியகுலிசம்' என்ற வாதத்திற்குரிய நூலின் ஆசிரியர். மாற்றுக் கருத்துக் குரியவர்கள் இவரைக் காணவே அஞ்சுவர்.அவ்வளவு வேகமாக வாதிடுவர்.

(5).வேதாந்ததேசிகர்:(பிறப்பு:கிபி.1268.1369)கண்டாம்சம். அவதாரத் தலம் காஞ்சி. துப்புல். திருத்தந்தையார் ஆனந்த சூரியர். திருத்தாயார் தோதாத்திரி அம்மை. திருக்குமாரர் நயினாராசாரியர். வேறு திருநாமங்கள் : 'வேங்கடநாதன், கவிதார்க்கிக கேசரி, சர்வதந்திரசுவதந்திரர், துப்புல் பிள்ளை' முதலியன. ஆசாரியர், நடாதூர் அம்மாளின் சீடரும், தம் மாதுலரும் உடையவர் திருவடி சம்பந்தியும் சுப்பிரதிஷ்டாம்சரான கிடாம்பி அப்புள்ளார். சீடர்கள்: நயினாராசாரியர் (தம்