பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168



சிறந்த பேச்சாளராக மதிக்கப்படுவது உண்டு. வள்ளுவரின் உவமைகள், கம்பரின் உவமைகள், காளிதாசரின் உவமைகள், சேக்சுபியரின் உவமைகள் முதலிய தலைப்பு களில் எழும் சொற்பொழிவுகளும் எழுத்துப்படைப்புகளும் ஒப்புமை காட்டும் திறனை ஒரு கலையாக்கிக் காட்டி, ஒப்புமை ஒரு கலை என்பதற்குப் போதிய சான்றுகளாய் ‘நிற்கின்றன.

இயற்கைக் கலை:

(3) ஒப்புமைக்கலை கற்றறிந்த அறிஞர்களின் தனியுடை மையன்று. ஒப்புமைக்கலை ஒர் இயற்கைக்கலை; விலை கொடுத்துக் கல்விகற்றுத் தெரிந்து கொள்ள வேண்டாத ஒர் எளிய கலை. கல்லாத-எழுத்தறிவேயில்லாத எளிய மக்களும் கையாளும் ஒர் உயிர்க்கலை. மக்களிடையே பேச்சுக்குப் பேச்சு-கருத்துக்குக் கருத்து நாவில் ஒப்பு மைக்கலை நடமிடுவதைக் காணலாம்.

மக்கள் கலை:

(4)ஒரு நாள் காலை ஒரு சிற்றுாரில் நாட்டு மருத்துவர் ஒருவரிடம் நான் சென்றிருந்தேன். அப்போது எளிய தோற்ற முடைய அம்மையார் ஒருவர் இரு குழந்தைகளுடன் அங்கு வந்தார். அவர் மருத்துவரிடம் சிறிய குழந் தையைக் காட்டி இதற்கு இரவெல்லாம் ஈயச்சட்டிகாய்ந் தாற் போல் காய்ந்தது என்றும், பெரிய குழந்தையைக் காட்டி இதற்குஇரவெல்லாம் பெருச்சாளிக்குஇரைத்தாற். போல் இரைத்தது’ என்றும் கூறினார். எத்துனை பொருத் தமான உவம்ைகள் என எண்ணி யான் வியந்தேன். நாட்டு மருத்துவரிடம் காய்ச்சல் மானி (தெர்மாமீட்டர்)இல்லை. எனவே, காய்ச்சலின் அளவை நுனித்தறியக் காய்ந்த ஈயச்சட்டி ஒப்புமையாய் நின்று துணைபுரிகின்றது.இந்தத்-