பக்கம்:வைணமும் தமிழும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ ஆசாரியர்கள்

151


அப்புள்ளார், 'ஸ்ரீகிருஷ்ணபாதர்' என்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை'. இவர் எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் சேவிக்க விரும்பித் தந்தையாரின் கட்டளைப்படி எங்காழ்வானின் திருமாளிகையில் வாயிற்கதவினைத் திறக்க ஆழ்வான் 'யார்?' என்றனர். வரதகுரு மறுமொழியாக 'நான்தான்' என்றனர். இதைச்செவியுற்ற எங்களாழ்வான் “நான் செத்தபிறகு வருக” என்று கூறி அனுப்பினார். வரதகுரு நடந்ததைத் தந்தையாரிடம் தெரிவிக்க, தந்தையாரும் “ஆசாரியரிடம் நான் என்னும் அகங்காரத்தையொழித்து ‘அடியேன்' என்று கூறிச் செல்க” என்று அறிவுறுத்தித் திரும்பவும் அனுப்பினார். வரதகுரு மீண்டும் சென்று அடியேன் இராமாதுசதாசன் என்று கூறித் தண்டன் சமர்ப்பித்தார். ஆசாரியரும் களிப்பு மிகுதியினால் புத்திரன்மீது கொள்ளும் பாசத்தைப்போல் அன்புடையராய் “எனக்கும் கொள்ளியிட்டு இறுதிச் சடங்கு செய்வதாய் வாக்குறுதி செய்து தருவீராகில் ரீபாஷ்யம் சேவிக்கலாம்” என்று கூறினார். வரதகுருவும் தந்தையாரின் அனுமதி பெற்று ஸ்ரீபாஷ்யம் படியைக் கையில் வைத்துக் கொண்டு வாக்குறுதி செய்து கொடுத்து ஸ்ரீபாஷ்யம் முதலிய கிரந்தங்களை ஐயம் திரிபு அறச் சேவித்தார்.

ஒருநாள் பெருமாளுக்குப் பாலமுது சமர்ப்பிக்கையில் பால் அதிக வெப்பமாய் இருப்பது கண்டு எம்பெருமானிடத்துப் பரிவாலே சாத்திர நியமத்தையும் கடந்து அப்பாலமுதை வாயிட்டு ஊதிப் ஆற்றப்புக பெருமாளும் மகனிடத்து மாதாவுக்கு உண்டான அன்பு தம் விஷமாக இவருக்கு உண்டானது கண்டு"எனக்கு நீர் அம்மாவோ'என்று உகந்தருளினான். அதுமுதல் இவருக்கு “அம்மாள்” என்ற