பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

செயலும் செயல் திறனும்



அவ்வாறாக இறுதிப்படுத்தப் பெற்ற 36 அடி உயரமுள்ள வெள்ளைக் களியத்தால் ஆன உரிமைப் பிராட்டியின் மாதிரிச் சிலையைப், பர்தோல்டியும் அவருடைய தொழில்நுட்ப உதவியாளர்களும் 300 பகுதிகளாக அறுத்துக் கூறு போட்டுத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்தெடுத்துக் கொண்டனர். பின்னர் ஒவொரு கூறையும் அதே வடிவ அமைப்பில் நான்கு மடங்கு பெரிதாகச் செய்து கொண்டனர். அவ் வடிவங்களும் வெள்ளைக் களியத்தாலேயே செய்யப் பெற்றன.

அவ் வடிவங்கள் செப்பப்படுத்தப் பெற்று, அவற்றை ஒன்றிணையும்படி தழுவி அணைத்து நிற்க, தச்சர்கள் பெரும்பெரும் மரச் சட்டங்களைச் செய்து கொண்டனர். அதனையடுத்து, அவற்றைப் போர்த்துவதற்குக் கொல்லர்கள் மாழைத் தோல் (Metal) தகட்டை உருவாக்க முனைந்தனர். இதற்காக முதலில் பர்தோல்டி வெண்கலத்தைப் பயன்படுத்தக் கருதினார். ஆனால் அது மிகக் கடினமானதாக இருக்கும் எனக் கருதிப் பின்னர் செம்பைப் பயன்படுத்தினார்.

துண்டுத் துண்டாக உருவாக்கப் பெற்ற அம்முந்நூறு செப்புத் தகடுகளும் இலக்கம் செப்புத் திருகாணிகளால் இணைக்கப்பட வேண்டும். பின்னர் சிலையைத் தாங்குவதற்கு 89 அடி உயரமுள்ள பீடமும், அதற்கு அடியாக 6 அடி உயரமுள்ள கருங்கல் தளமும் வரையறுத்துக் கொள்ளப் பெற்றன.

அதன் பின்னர் இன்னொரு சிக்கலுக்கு வழி காண முற்பட்டனர். உடலைத் தாங்கி நிற்க முதுகதந்தண்டு உதவுவது போல், சிலையை உள்முகமாக நிமிர்ந்து நிற்கச் செய்ய முதுகந்தண்டு போல் பயன்படும் ஒர் இரும்புச் சட்டம் ஒன்று சிலையின் உயரத்திற்குத் தேவைப்பட்டது.

இதற்கென அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈஃபில் என்னும் பொறியியல் வல்லுநரைப் பர்தோல்டி அழைத்துக் கலந்து பேசி முடிவெடுத்தார். பாரீசு நகரில் சீன் ஆற்றங்கரையில் உள்ள உலகப் புகழ்ப்பெற்ற ஈஃபில் இரும்புக் கோபுரத்தைக் கட்டி பெருமை பெற்றவர் அவர். அதனாலேயே அக்கோபுரத்திற்கு (ஈஃபில் கோபுரம்) என்று பெயர் வந்தது. ஆனால் எல்லாவற்றையும் விட அவருடைய சிறப்புப் படைப்பு இந்தச் சிலையின் மேல் பகுதியாக விருக்கும் செம்புத் தோலைத் தாங்குவதற்கான ஓர் இரும்புச் சட்டகத்தினை உருவாக்கியதே ஆகும்.

மேல் தோல் மெல்லியதாக இருப்பினும் அதன் மொத்த எடை 2 இலக்கம் தூக்கு (Pound) ஆகும். (ஏறத்தாழ 89.5 கல்லெடை) இவ்விரும்புச் சட்டகத்தை நியூயார்க்குத் துறைமுகத்தில் அடிக்கும் கொடுங்காற்றை