பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

52 மாணிக்கவாசகர் of any one; We fear not anything. We have mingled with the devotees of His devotees. More and more we shall bathe by being immersed in the ocean of grace. கோயில் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் அன்பினால் அடியேன் ஆவியோடு யாக்கை Anbinaal adiyen aaviy odu yaakkai ஆனந்தமாய்க் கசிந்து உருக aanandha maayk kasindhu uruga என்பரம் அல்லா இன்னாள் தந்தாய் Enparam allaa innarull thandhaay யானிதற்கு இலனொர் கைம்மாறு yaanidharrku ilanor kaimmaarru முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த Munbumaayp pinbu muzhudhumaayp parandha முத்தனே முடிவிலா முதலே muththane mudivilaa mudhala தென்பெருந் துறையாய் சிவபெருமானே Thenperun thurraiya ay sivaperumaane சீருடைச் சிவபுரத் தரைசே. seerudaich sivapurath tharaise. அன்புகொண்டு அடியேனுடைய உயிரும் உடம்பும் மகிழ்ச்சி யோடு கரைந்து உருகுமாறு, என்னால் பெறமுடியாத இனிமை யான திருவருளைக் கொடுத்தாய். இதற்கு நான் ஒரு பதில் உதவி யும் செய்ய முடியாது. எல்லார்க்கும முன்னவனாய், முழுப்பொரு ளாய்ப் பரவி உள்ள முத்தி வடிவுஆனவனே ! முடிவு இல்லாத முதல்வனே! தெற்கில் உள்ள திருப்பெருந்துறை என்னும் தலத்தில் உள்ளவனே! சிவபெருமானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! அன்பு - love; affection ஆவி-உயிர்-life; soul ஆனந்தம் - மகிழ்ச்சி-joy கசிந்து உருக - கரைய-to melt அடியேன் - I, your devotee யாக்கை - உடம்பு body என்பரம் அல்லா-என்னால் பெற முடியாத - that cannot be attained by me, that is beyond my control