பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திருநாவுக்கரசர்

                             திருச்சிற்றம்பலம்                                   
              நா மார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்                             
              Naamaarkkum kudiyallom namanai anjöm
                  நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்              
                  naragaththil idarppadõm nadalai illõm                     
              ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
              Enlaappcm pinniya Iriyöm pannivom allõm                          
                  இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை                                               
                  imbąm ē ennaa]]um thunbam illai                                   
              தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மைஆன                            
              Thaam aaIkkum kudiyallaath than maiaana
                  சங்கரன் நல்சங்க வெண்குழை ஒர்காதில்                    
                  sankaran naisanga vennkuzhai õrkaadhil                    
              கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்                                   
              Kömaarke naamendrum meellaa aallayk
                  கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினேமே.                           
                  koymmalarch chēvadi innaiyē kurruginõmē.
       நாம் யாருக்கும் குடிமக்கள் அல்லோம்; இயமனைக்கண்டு பயப்படமாட்டோம்; நரகத்தில் (விழுந்து) துன்பம் அடைய மாட்டோம்; பொய் (எம்இடம்) இல்லை; களிப்புற்று இருப்போம்; நோய்கள் அறிய மாட்டோம்; பணிய மாட்டோம்; இன்பமே, எந்த நாளிலும் துன்பம் இல்லை.
       தாம் எவருக்கும் குடிமகன் அல்லாத தன்மை உடையவன், சங்கரன்; நல்ல சங்கினுல் ஆகிய வெண்மை நிறம் பொருந்திய குழையை ஒரு காதில் அணிந்துள்ள தலைவன்: அவனுக்கே நாம் எப்பொழுதும் மீண்டு வராத அடிமை ஆகினேம்; அவனுடைய மலர்போன்ற செம்மையான இரண்டு திருவடிகளையே அடைந்தோம்.

ஆர்க்கும்-யாருக்கும்-to any one (to all) குடிஅல்லோம்-not a subject to நமன்-poor—Yama, the God of Death