பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஹைாராஷ்டிர பாஷையிலிருந்து வந்த மொழிகள் சிவாஜி காலத்தில் மத்திய இந்தியாவிலிருந்து மஹாராஷ்டிரர்கள் தமிழ் நாட்டிலிருந்துவந்து தஞ்சாவூரில் அரசாண்டனர். இவர்கள் மூலமாக சில மராட்டிய மொழிகள் தமிழில் கலக்கலாயின ; இதற்கு உதாரணமாக ஜட்கா, ஜான்வாசம், கில்லாடி, காமாட்டி, சாம்பார்=குழம்பு வகை, பிட்லெ=ஓர் கூட்டுவகை, தாண்டா=(பின்னலில் அணியும் மாலை) முதலியவற்றைக் கூறலாம். இவர்களுக்கெல்லாம் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் ஐரோப் பியர்களாம். இவர்களுள் முதன்முதல் வந்தவர்கள் போர்த்துகேயர். பிறகு டச்சுக்காரர்கள், அப்புறம் பிரெஞ்சுக்காரர்கள், கடைசியில் ஆங்கிலேயர் : இவர்கள் முதலில் வர்த்தகஞ்செய்யவே இங்குவந்தவர் களாவார்கள், . (1) போர்த்துகேயர்கள் தமிழ்நாட்டில் 1498 வருஷம் வந்தனர். அவர்கள் அதிககாலம் தங்கவில்லை. அன்றியும் இரண்டொரு இடங் களில்தான் வர்த்தகத்தின்பொருட்டு இங்கு தங்கினர். அவர்கள் மூல மாக தமிழ் பாஷையில்வந்த மொழிகள் சிலவே, அவற்றிற்கு உதாரணமாக: 魏町時 {ു. சன்னல் பலகணி பாதிரி கிறிஸ்துவ போதகர் (தகப்பன்) பிரங்கி Fernghi பிராந்தா Verandhi கொரடா கோப்பை Cup (2) டச்சுக்காரர்கள் போர்த்துகேயரைவிட குறைந்தபடி தமிழ் நாட்டில் தங்கினவர்கள். இவர்கள் முதன்முதல் 1609 வருஷம் பழ வேற்காட்டில் தங்கினர். பிறகு சதுரங்கப்பட்டணம் (Sadras) வந்தனர். தமிழ் பாஷையில் கலவாத டச்சுமொழி மிகக் குறைந்தன வாம். உதாரணமாக கக்கூஸ், சாக்கு (கோணிப்பை)முதலியவையே. (3) பிரெஞ்சுக்காரர்கள் 18ஆம் நூற்றண்டின் முதலில் தமிழ் நாட்டிற்கு வந்து, பல வருடங்கள் இங்கு தங்கியிருந்து யுத்தமூலமாக