பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎蒙 கடல் கொள்ள, ஓர் பாண்டிய மன்னன், இங்கிருந்த கடம்பவனத்தை யழித்து கோயில்களைக் கட்டி சுற்றிலும் பட்டணத்தை யுண்டாக்கின தாகப் ஸ்தல புராணம் கூறுகிறது. இப்பட்டணத்திற்கு ஆலவாய் என்று மற்றெரு பெயர் வந்ததற்குக் காரணம் பட்டணத்தின் எல் அலயை அரசன் விரும்பியபோது, ஈசன் கட்டளையால் ஓர் பாம்பானது சுற்றிவந்து எல்லேயைக் காட்டியதாக ஸ்தல புராணம். ஹாலம்-- ஆஸ்யம்=ஹாலாஸ்யம்=பாம்பின்வாய் என்று பொருள்படும். சேரர்களுடைய ராஜதானி கரூர் என்பதாம் கரு+ஊர் (கருமை நிறமுடைய ஊர்) என்பதாம் டாலமி (Ptolemy) என்னும் மேனுட்டு பூர்வீக ஆசிரியர் இதைக் குறித்திருக்கிருர். இதன் பழைய பெயர் வஞ்சி என்பதாம். சிலப்பதிகார காலத்தில் இப்பெயர்தான் வழக்கத்தி லிருந்தது. இது மலேயாள நாட்டிலுள்ளது; மலையாள மன்னருடைய விருதுகளில் ' வஞ்சிபாலன்" என்பது ஒன்ருகும். ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலிருந்த ஊர்களின் பெயர்களெல்லாம் கேவலம் தமிழ்ச் சொற்களாக இருந்தனவென்று கூறலாம்; உதாரண மாக-அதிகை, ஆருர், காட்டுர், இருந்தையூர், கருவூர், மருவூர் முத லியவற்றைக் கூறலாம். சில ஊர்கள், ஆதிகாலத்தில் அவ்விடத்தில் நிறைந்திருந்த விருட்சம், கொடி, செடி முதலியவற்றினின்றும் பெயர் பெற்றிருக்கின்றன. உதாரணமாக:-கடம்பூர், பனங்காட்டுர், காஞ்சி, தில்லை, முல்லை, மருதூர், குறுப்பலா முதலியவற்றைக் கூறலாம். மிருக பட்சிகளின் பெயர்களைக் கொண்ட ஊர்களுக்கு உதாரணமாக:புலியூர், மயிலாப்பூர், நாகபட்டணம், காரையூர், ஆடுதுறை, மான்குடி முதலியவற்றைக் கூறலாம். காடு மலைகளின்றும் பெயர்பெற்ற ஊர் கள்:-முதுகுன்றம், காட்டுப்பள்ளி, வெண்காடு, வலஞ்சுழி, ஆத்தூர், ஆறுகாடு முதலியவற்றைக் கூறலாம். பூமியின் கில, வளம் முத லியவைகளின்றும் பெயர்பெற்ற ஊர்களுக்கு உதாரணமாக:-கரூர், நெல்லூர், கற்குடி, நத்திலம், களத்தூர், மணலி, முதலியவற்றைக் கூறலாம். சில தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்கள், சிதைந்தும் மாறியும், இருக்கின்றன. உதாரணங்கள்: தற்காலப் பெயர் பூர்வீகப் பெயர் தர்மபுரி தகடூர்