பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

泰亨 இச்சந்தர்ப்பத்தில் ஜப்பான் பாஷையில் மாலு என்பது சமுத்தி ரத்தின் மீது செல்லும் கலத்தைக் குறிப்பதாமென்பது கவனிக்கத் தக்கது. அன்றியும் சம்பான் என்பது சீன மொழியாம். முற்காலத்தில் இந்த ஜாதியார்களும் நமது தேசத்தில் தமிழர்களுடன் வர்த்தகம் செய்தனர் போலும். தற்காலம் தமிழ்நாட்டில், கப்பலேறி வர்த்தகஞ் செய்பவர்கள் மகம்மதியர்களாகிய தமிழ் பேசும் லப்பையார்களும், காயலார்கள் எனும் ஜாதியர்களேயாதலால், அவர்கள் பேச்சில் கப்பல் யாத்திரை யைச் சார்ந்த மொழிகளைக் கேட்கலாம். மேலும் ஆதிகாலத்தில் தமி ழர்கள் உபயொகித்த கப்பல்களெல்லாம், மரத்தாலானவை என்ப தற்கு மரக்கலம் என்னும் பெயரே போதுமான அத்தாட்சியாம். இச் சந்தர்ப்பத்தில் இரும்பு என்பதே. பூர்வீகத் தமிழ்நாட்டில், வழங்க வில்லையென்றும், நெடுங்காலம் சென்ற பிறகுதான் இரும்பு தமிழ்நாட் டில் வழங்கலாயிற்று என்றும். பூர்வீக நாகரீக சாஸ்திரம் என்று சொல்லத்தக்க ஆர்க்கியாலஜி (Archoealogy) என்னும் சாஸ்திர நிபுணர் கூறுகிருர்கள். இரும்பு என்னும் பதம், கடுமை எனும் அர்த் தத்தைக் கொடுக்கும் இரு என்பதிலிருந்து காரணப் பெயராக வந்த தென்று கால்ட்வெல் துரை அபிப்பிராயப்படுகிருர். மறைந்துபோன உணவுப் பொருள்களைக் குறிக்கும் மொழிகள் தமிழர்களுடைய உணவுப் பொருள்களின் பெயர்களிலும், பழை யன கழித்து புதியன புகுதலாயின; ஆதிகாலத்தில் வழக்கிலிருந்து மறைந்துபோன (அல்லது மறைந்துகொண்டிருக்கும்) மொழிகளுக்கு உதாரணமாக அடியில் வருவனவற்றைக் கூறலாம். கோபை, நுணவை, என்பவை பழைய காலத்து தின்பண்டங்களாம். (இவை எள்ளாற் செய்யப்பட்டவை என்று கூறப்பட்டிருக்கிறது) எட்கசி என்பதும் எள்ளாற் செய்யப்பட்ட ஒர்வித உணவாம். மறைந்த பழைய தமிழ் அரசாங்கத்து மொழிகள் தமிழ் நாட்டு அரசர்களுடைய அரசாட்சி மாறி, அந்நியர்கள் ஆள ஆரம்பித்த பிறகு, அவர்கள் அரசைச் சார்ந்த பல தமிழ் மொழிகள் வழக்கற்றுப் போயின. எல்லாவற்றையும் கருதுதல் கஷ்டமாகும். தமிழ் அரசர்கள் பூர்வத்தில் விதித்து, பிறகு மறைந்துபோன வரி