பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

 பதிலிருந்துவந்தது. இதுவும் வெளி தேசத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்ட வஸ்துவாம். இவ்வாறே ஒவ்வொரு பதார்த்தத்தின் பெயரையும் எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம். ஆயினும் அவ்வாறு செய்ய அவகாசமில்லாதபடியால், புகையிலை என்கிற தமிழ்மொழியை மாத்திரம் இங்கு ஆராய்ந்துவிட்டு மேலே செல்வோம். புகையிலை என்று புகை-இலை= புகையிலையாம். இதற்கு புகையைத் தரும் இலை என்று பொருள் கூறலாம். ஆகவே இது காரணப் பெயராம்; புகை யிலையைச் சுருட்டிப் பிடிப்பதற்கு "சுருட்டு" என்கிற பெயர்; இதுவும் காரணப் பெயராம்; இதனாலாகிய மூக்குத் தூளாகிய பொடியும் காரணப் பெயராம் இப்பதங்களினால் ஆதிகாலங் தொடங்கி, ஐரோப்பியர் புகையிலையைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்த காலம்வரையில் புகையிலையை உபயோகிக்கும் வழக்கம் நமக்குக் கிடையாது என்று கூறலாமல்லவா?


இடுகுறிப் பெயர், காரணப் பெயர் என்று நாம் குறித்த இரண்டு பிரிவுகளன்றி, காரண இடுகுறியென்று மற்றொரு பிரிவு தமிழ் இலக்கண நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக சிவ பெருமானது ஒரு பெயராகிய முக்கண்ணன் என்பதை கூறலாம். முக்கண்ணன் என்பது மூன்று கண்களைபுடையவன் என்று சாதாரணமாய்ப் பொருள்படும் ஆயினும் விசேஷார்த்தமாக இப்பெயர் இங்கு சிவபெருமானுக்கு உபயோகப்படுவது காரண இடுகுறிப் பெயராம்.


இதர பாஷையிலிருந்து தமிழில் புகுந்த சொற்கள்

உலகில் பேசப்பட்டு வரும் ஒவ்வொரு பாஷையும் சதா காலம் மாறிக்கொண்டே வருகிறதென முன்பே அறிந்தோம்; அதாவது எப் பொழுதும் பழைய சொற்கள் மறைந்தும் புதிய சொற்கள் புகுந்தும் மாற்றமடைகிறதென்று, இவ்வண்ணமே நமது தமிழ் மொழியும் மாறிக்கொண்டு வருகிறதென்பதற்கு சந்தேகமில்லை. ஒரு பாஷையில் இதர பாஷைகளிலிருந்து மொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டனவென்பது, அப்பாஷைக்கு அவமான காரியமாகாது. செழித்தோங்கும் ஒவ்வொரு பாஷையும் மற்ற பாஷைகளிலிருந்து அநேகம் பதங்களை உட்கொண்டே வருகிறதென்பதற்கு ஐயமிற்று. தற்காலத்தில் இங்கிலீஷ் என்றும் வழங்கும் பாஷையில் நார்மன் (Norman French) லாதின் (Latin) மொழிகளும் ஆயிரக்கணக்காக நுழைத்திருக்கின்றன, அன்றியும் இன்றும்