பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5籍 பார்=மலபார் என்ருயது என்பதற்கு ஐயமில்லை. பார் என்ருல் பர்ஷியா பாஷையில் தேசம் என்று அர்த்தம் : இத்தேசத்தவர் தமிழ் நாட்டின் மேற்குக் கரையாகிய மலைகளையுடைய பிரதேசத்தில் ஆதியில் வர்த் தகம் செய்தபடியால், மலையாளம் எனும் இந்நாட்டை மலபார் என்று அழைக்க வேண்டும். சோழ அரசர்களுடைய புராதனமான ராஜதானி, உறையூர் என்பதாம். அரசன் உறைவிடம், உறையூர் என்றிருக்கலாமோ ? இவ் வுறையூருக்கு கோழி என்று பழைய பெயர் ஒன்றுண்டு. ஒரு கோழி ஒரு யானையை இங்கு துரத்தியதாக இவ்வூர்க்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது, கோழி வேந்தன் எனும் சொற்ருெடரைக் காண்க. உறையூர் என்பது தற்காலம் திருச்சிராப்பள்ளியிலடங்கிய ஓர் சிற்றுாராகும், பாண்டியர்களுடைய ராஜதானி, தென் மதுரை' என்று ஓர் ஊர் முற்காலத்தில் இருந்ததாக அறிகிருேம் ; அதைக் கடல் கொண்ட தாகச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. சிலகாலம் கவாடபுரம் என்பது ராஜதானியாக இருந்தது. இவ்வூரின்பெயர் சமஸ்கிருத ராம யணத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. அன்றியும் கொற்கை என்பதும் பாண்டியர்களுடைய ராஜதானியாகச் சிலகாலம் இருந்ததாக அறி கிருேம். (கொன்றை வேந்தன் கொற்கையாளி என்பதைக் காண்க.) இக்கொற்கை யெனும் ஊர் ஆதி காலத்தில் தாம்ரபர்ணி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் இருந்ததாக அறிகிருேம். தற்காலம் கடலானது பின்னிட்டதல்ை கொற்கை யெனும் ஊருக்கும் கடலுக்கும் இடையில் சிலதுரம் மணற்பாங்காய பூமி உண்டாயிருக்கிறது. பாண்டியர்களுடைய கடைசி ராஜதானியாகவிருந்த இம்மதுரைப் பட்டணத்திற்கு மற்ருெரு பெயர் கூடல் என்பதாம். கான்மாடக் கூடல் என்று இதற்கு பழைய நூல்களில் பெயராகக் கூறப்பட்டிருக் கிறது. அக்காலத்தில் நான்குபுறமும் பெரிய மாடங்கள் (கோபுரங்கள்?) உடைத்தாயிருந்ததால் அப்பெயர் வந்ததெனச் சொல்லப்பட்டிருக் கிறது. இதற்குக் கடம்பவனம் என்று மற்ருெரு பெயர் உண்டு. (மதுரையில் வீற்றிருக்கும் பரமசிவத்திற்கு கடம்பவனநாதர் என்று பெயர் இருப்பதைக் கவனிக்க.) ஆதிகாலத்தில் இங்கு பூமி கடம்ப வனம் நிறைந்திருக்கவேண்டும். தற்காலத்தில் பெரியகோலியில் ஸ்தல விருட்சம் கடம்ப மரமே. பாண்டியர்களுடைய பழைய ராதானியைக்