பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

 அதாவது ஏரில் கட்டியிழுக்க உபயோகமாகும் ஜந்துக்கள், என்று கால்ட்வெல் துரை கூறியுள்ளார். இது உண்மையாயின் இவ்விரண்டு பெயர்களும் காரணப் பெயர்களாகும். கோநாய் என்பது நாய் என்கிற பதத்திலிருந்து வந்திருக்கலாம். கோ-நாய் அதாவது நாய் வர்க்கத்தில் அதிக பலமுள்ளது. சிறந்தது. அரசனைப் போன்றது. என்று பொருள் படலாம் : அப்படியாயின் இது காரணப் பெயராம். வெற்றிலை என்பது வெறும்+இலை, எனவும் கற்கண்டு என்பது கல்கண்டு எனவும், வந்த காரணப் பெயர்கள் என்று எல்லோரும் அறிவார்கள். இப்படியே ஒவ்வொரு பொருளின் பெயரையும் எடுத்துக் கொண்டு. அது இடுகுறிப் பெயரா, காரணப் பெயரா என்று ஆராய லாம். இவ்வாறு செய்வது மிகவும் பயனைத் தரும் என்பதற்கு ஐய மின்று. இச்சந்தர்ப்பத்தில் ஒரு தமிழ் அறிஞர் ஆதியில் அசைச் சொற்களுக்கும் அர்த்தமிருந்தன. அவைகளை பிறகு நாம் மறந்துவிட் டோம் என்று கூறினராம்.


மேலும் ஒரு பொருளுக்கு இடுகுறிப் பெயரும் இருக்கலாம் காரணப் பெயரும் இருக்கலாம். மான் என்கிற பதத்தை எடுத்துக் கொள்வோம். ஆதி தமிழ் மனிதன் மான் என்கிற ஜந்துவிற்கு, ஏன் அப்பெயர் வைத்தான் என்று நாம் அறிகிலோம். ஆகவே அப் பதத்தை இடுகுறியாக மதிக்கிறோம்; ஆயினும் அதே சந்துவிற்கு புல்வாய் என்கிற பெயரும் தமிழில் உண்டு. இது காரணப் பெயரா கும். புல்-வாய்=புல்வாய், எந்நேரமும் புல்லை மேய்ந்து கொண் டிருக்கும் (மென்றுகொண்டிருக்கும்) வாயையுடைய பிராணி என்பது இப்பதத்திற்கும் பொருளாம், ஆகவே இது காரணப் பெயராயது. இப்படியே புலி என்பதற்கு தெற்கே கடுவாய் என்கிற பெயர் உண்டு. புலி இடுகுறிப் பெயராம், கடு+வாய்=கடுவாய், கடுமையான வாயை யுடையது காரணப்பெயராம். இத்தகைய உதாரணங்கள் பல உள அவைகளைக் கூறப்புகின் பெருகும் இதனுடன் விடுத்தோம். பொதுவில் தமிழ் நாட்டில் ஆதிகாலத்தில் கிடைத்துள்ள பொருள் களுக்கெல்லாம் இடுகுறிப் பெயர்களுண்டென்று ஒருவாறு கூறலாம். அன்றியும் அயல்நாட்டிலிருந்து வந்த பொருள்களுக்கெல்லாம் அவைகள் கிடைக்கும் தேசங்களில் அவைகளுக்கு வழங்கிவந்த பெயர் களையோ, அல்லது காரணப் பெயர்களையோ வைத்தனர் என்று மொத் தத்தில் கூறலாம் ; இதைப்பற்றிக் கருதுமிடத்து, பூ, காய் கறி மர வர்க்கங்களை எடுத்துக் கொண்டு ஆராய்வோம்; -