பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

 பாதமாய் ஆராய்ந்தறியத்தக்க மேல்நாட்டு அறிஞர்களுடைய அபிப் பிராயமும் நமக்குக் கிடைத்திருககிறது. டாக்டர் கால்ட்வெல் தமிழ் பாஷையானது ஆசிய பாஷையைப் பார்க்கிலும் பழமையான பாஷை யாயிருக்கலாம் எனக் கூறியுள்ளார் : தமிழ் மொழி மிகவும் புராதன மானது என்பதற்கு 6 நியாயங்கள் எடுத்து விவரித்திருக்கிறார் அன்றியும் தமிழானது திராவிட பாஷைகளுக்குள் எல்லாம் மிகவும் பழமையானது என்றும் கூறியுள்ளார். எட்வர்ட் பிரைஸ் (Edward Prise) என்பவர் திராவிடர்கள், தற்காலம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே ஆதிகால முதல் இருந்திருக்கிறதாகக் காண்கிறது என்று சொல்லியுள்ளார். திராவிட பாஷைகளுக்குள் தாய் பாஷையாயிருந்தது தமிழ் என்று காலஞ்சென்ற, "மனோன்மணியம்' நூலாசிரியராகிய சுந்தரம் பிள்ளை அவர்களைப்போன்ற தமிழ் வித்வான்கள் கூறியதன்றி, பாஷா தத்துவ சாஸ்திரம் பயின்ற, பல ஆங்கில வித்வான்களும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். கால்ட்வெல் துரை, மங்கோலிய பாஷைக்கும் திராவிட பாஷைகளுக்கும் மிகவும் பொருத்தம் இருப்பதாகக் கூறியுளார். அன்றியும் ஆஸ்திரேலியா தீவின் மேற்குப் பாகத்திலும் தெற்குப் பாகத்திலும் உள்ள சுதேச ஜாதியார் பேசும் பாஷையில், நாள், தீ, அவள், நாம் முதலிய பதங்கள் அநேகமாய் சென்னை ராஜதானியில் மீன் பிடிக்கும் ஜாதியார் உபயோகிக்கும் தமிழ் பதங்களேயாம். ஆகவே பழையதான தமிழ்மொழி ஆஸ்திரேலியாவரையில் பரவியிருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், இப்பொழுது சமுத்திரமாயிருக்கும் பாகமெல்லாம் பூமியாயிருந்து. தென் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா கலந்திருந்ததாக பூதத்வ சாஸ்திரிகள் எண்ணுவது கவனிக்கத்தக்கது.


இனி தாய் பாஷையாகிய தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம் மலையாளம் முதலிய பாஷைகள் கிளைகளாகப் பிரிந்ததைப்பற்றி சிறிது ஆராய்வோம். பாஷா தத்துவ சாஸ்திரத்தை பட்சபாதமில்லாமல் ஆராயும் அறிஞர், மேற்குறித்து திராவிடர்களுடைய ஆதிபாஷை தமிழ் என்றும், அதனினின்றும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய பாஷைகள் அநேக நூற்றாண்டு முன்பாக பிரிந்தன என்றும் தற்காலம் ஒப்புக்கொள்ளுகின்றனர்.


சாதாரணமாக பாஷைகள் பேசப்பட்ட பாஷைகளாக மாத்திரம் இருக்கும்பொழுதுதான், அவைகள் அதிகமாக மாறுதல் அடைகின்றன

அ-2