பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதங்கள் உபயோகிக்கிருேம். உதாரணமாக :-உறட்டுக்கை என் பது ஒர் பழைய தமிழ் மொழியாம், இடது கையென்று பொருள்படும், இடது கையென்று உச்சரிப்பது சுலபமாயிருப்பதால், சாதாரணமாக உறட்டுக் கை என்று வழக்கற்றுப்போயிற்று. உறட்டுக்கை மேஸ்திரி என்னும் ஏளன. மொழித் தொடரில் மாத்திரம் இது உபயோகிக்கப் பட்டு வருகிறது. ஒட்டாரம் என்ருல் பிடிவாதம் என்று அர்த்த மாகும். ஆயினும் சாதாரணமாகப் பிடிவாதம் என்கிற மொழியே வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறித்தவை போன்ற பல தமிழ் மொழிகள் தமிழ்ச் செய்யுள்களில் மாத்திரம் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியும் பூர்விக நாகரீகமும் ஒரு பாஷையிலுள்ள மொழிகளை நாம் ஆழ்ந்து ஆராய்ந்து பார்ப்போமாயின் அப்பாஷை பேசுபவர்களைப் பற்றிப் பல விஷயங்கள் அறியலாம் என்று எல்லா பாஷா தத்துவ சாஸ்திரிகளும் கூறுகின்றனர், இங்ங்ணம் நமது தமிழ் மொழிகளை எடுத்துக்கொண்டு அவைகள் நமக் கென்ன தெரிவிக்கின்றன பார்ப்போம். காடு, ககரம், முதலியவைகளைக் குறிக்கும் மொழிகள் சாதாரணமாக நம் நாடுகளின் பெயர்களிலும், ஊர்களின் பெயர் களிலும் என்ன இருக்கிறது என்று எண்ணக்கூடும். கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போமாயின் இவற்றைக் கொண்டும் நாம் அறியக் கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன என்று வெளிப்படும். புரொபசர் பிளாகி (Prof Blacki) என்பவர் ஒரு பாஷையின் மொழிகளை ஆராய்ச்சி செய்யுங்கால் ஊர்களின் பெயர்களும், மனிதர்களின் பெயர் களும், மற்றவைகளைவிட அபூர்வமானதும், நூதனமானதும், விசேஷ் மானதுமான, அநேக விஷயங்களை நமக்கு அறிவிக்கும் என்று கூறி யுள்ளார். ஆகவே நமது தமிழ் மொழிகளில் ஊர்களின் பெயர்களும் நாடு முதலியவைகளின் பெயர்களும் நமக்கு என்ன தெரிவிக்கக் கூடும் என்று ஆராய்வோம். தமிழ் வழங்கும் நாடானது முற்காலத்தில் முக்கியமாக சேர தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம், என்று மூன்ருகப் பிரிக்கப் பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. சேர, சோழ, பாண்டிய அரசர் கள் ஆண்டபடியால், இத்தேசங்களுக்கு அப்பெயர்கள் வந்தனவாம். 7